பாஜக அரசு கவிழ்கிறதா? கூட்டணியில் சிக்கல்.. மணிப்பூரில் ட்விஸ்ட்!
Manipur Violence : மணிப்பூரில் ஆளும் பாஜகவுக்கு கொடுத்த வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இனக் கலவரத்தை, கட்டுப்படுத்த ஆளும் பாஜக அரசு நடவடிக்கை என்று தேசிய மக்கள் குற்றச்சாட்டி, கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளது.
மணிப்பூரில் ஆளும் பாஜகவுக்கு கொடுத்த வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இனக் கலவரத்தை, கட்டுப்படுத்த ஆளும் பாஜக அரசு நடவடிக்கை என்று தேசிய மக்கள் குற்றச்சாட்டி, கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பைரன் சிங் உள்ளார். 60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டப்ரேவையில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆளும் பாஜகவுக்கு 32 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆளும் பாஜக 32 எம்.எல்.ஏக்களுடன் தனிப் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.
மணிப்பூரில் பாஜக அரசு கவிழ்கிறதா?
இந்த நிலையில், மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, மணிப்பூர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது. இருப்பினும் ஆளும் பாஜக 32 எம்.எல்.ஏக்களுடன் தனிப் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் எந்த பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நாகா மக்கள் முன்னணி கட்சியில் 5 எம்.எல்.ஏக்களும், ஐக்கிய ஜனதா தளம் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் பாஜகவுக்கு இருப்பதால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. மேலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இந்த சூழலில் தான், மணிப்பூர் பாஜக அரசுக்கான ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்பப் பெற்றது. இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு தேசிய மக்கள் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “மணிப்பூரில் கடந்த சில நாட்களாக நிலைமை மோசமாக இருக்கிறது.
Also Read : மூச்சு திணறும் டெல்லி… உச்சத்தை தொட்ட காற்று மாசு.. கடும் கட்டுப்பாடுகள்!
கூட்டணியில் சிக்கல்
NPP (National People’s Party) withdraws its support to the N. Biren Singh-led Government in Manipur with immediate effect. pic.twitter.com/iJ8VpPxWD2
— ANI (@ANI) November 17, 2024
அப்பாவி மக்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வ்ர பிரேன் சிங் தலைமையிலான மாநில அரசு இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முற்றிலும் தவறிவிட்டது.
தற்போதை சூழலைக் கருத்தில் கொண்டு, மணிப்பூர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவால் தொடங்கப்பட்ட தேசிய மக்கள் கட்சி, வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கயிமான கட்சியாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அக்கட்சி மணிப்பூர் வன்முறையை முன்வைத்து, பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மணிப்பூரில் முற்றிய வன்முறை
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி என இருகுழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது பெரும் வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 70 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
இந்த கலவரம் கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் தணிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். ஆனாலும், ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. சமீபத்தில் மணிப்பூரில் பயங்கரவாதிகளால் 6 பேர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 16ஆம் தேதி போராட்டங்கள் வெடித்தன.
மணிப்பூர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளானதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும், முதுல்வர் பிரேன் சிங்கின் பூர்விக வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டம் முற்றியதை அடுத்து, இம்பால் கிழக்கு உள்பட 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. மறுஆய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
தொடர்ந்து இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அசாம் ரைஃபிள்ஸ் படையினர், எல்லை பாதுகாப்புப் படையினர், மாநில காவல் துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு பிரதான காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.