Constitution Day 2024: இந்திய அரசியலமைப்பு சட்டம்.. எப்படி உருவானது தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டு 75-வது ஆண்டாகும். இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அரசியலமைப்பு தினம்: நமது இந்திய நாடு பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், உணவு வகைகள், உடைகள் என அனைத்தும் நிறைந்த பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாடாகும். அப்படியான நம் நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பொருட்டு அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டு 75-வது ஆண்டாகும். இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் அமைப்பு சட்டத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் அது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளை தான் நம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மதிப்புகளை கொண்டாடும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன் வரலாறு பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம்
இதுதான் உலக நாடுகளில் உள்ள அரசியலமைப்பு சட்டத்தில் மிக நீண்டதாகும். இந்த 25 பிரிவுகளில், 12 அட்டவணைகள், 448 உட்பிரிவுகள், 106 திருத்தங்கள் உள்ளது. முதல் முறையாக இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் அரசியலமைப்பு சட்டம் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 எழுத தொடங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா தன்னாட்சி அதிகாரம் கொண்ட மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்தும் நாடாக அறிவித்து கொண்டது. அரசியலமைப்பு படி இந்தியா கூட்டாட்சி கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி என்ற வார்த்தைக்கு பதிலாக ஒருங்கிணைந்த பகுதி என்ற வார்த்தையை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அதன் முகவுரையில் இறையாண்மை கொண்ட மக்களாட்சி, சமதர்ம, சுதந்திர குடியரசு எனவும், இந்திய ஒன்றியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பு சட்டத்தில் இந்திய குடி மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பற்றியும் கடமைகள் பற்றியும் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்ட போது பல்வேறு நாடுகள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி, அடிப்படை உரிமைகள் அமெரிக்காவிலிருந்தும், கூட்டாட்சி தத்துவம் கனடாவில் இருந்தும், மாநிலங்களவை நியமன எம்பிக்கள் உரிமை அயர்லாந்து நாட்டிடம் இருந்தும், அரசியலமைப்பு சட்டத்திருத்தம் முறை தென்னாப்பிரிக்கா நாட்டிலிருந்தும் உள்ள சட்ட திட்டங்களை முன்மாதிரியாக கொண்டு எழுதப்பட்டது.
Also Read: Tirupati Darshan: ஏஐ வசதியை கொண்டு வரும் திருப்பதி தேவஸ்தானம்.. இனி கூட்டமே இருக்காது
அம்பேத்கர் தலைமையில் குழு
1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்ததால் சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தொடங்கி அம்பேத்கர், ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத் என பலரும் இடம் பெற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி அம்பேத்கர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டது. அதில் கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா,மாதவ ராவ், டி. டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
Also Read: Namakkal: சாதி பெயரில் இயங்கி வந்த பள்ளி.. மை பூசி அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்
அடுத்த 6 மாதத்தில் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான அறிக்கையை இக்குழு 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி சமர்பித்தது. அந்த அறிக்கை முழு வடிவம் பெற்று 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக இருந்த இராஜேந்திரபிரசாத் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ராஜேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். 1930ல் லாகூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஜனவரி 26 ஆம் தேதி நடந்தது. அதில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தீருவது என முடிவு செய்யப்பட்டது. அந்த நாளை நினைவுக்கூறும் வகையில் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் பல கட்ட விவாதங்களுக்குப் பின் 1950ல் ஜனவரி 24 அன்று அனைத்து உறுப்பினர்களாலும் ஒப்புதல் பெறப்பட்டது. ஜனவரி 26 முதல் அனைத்து மாநிலங்களுக்கு சட்டமானது குறிப்பிடத்தக்கது.