Bengaluru: பெங்களூருவில் கனமழை.. இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!
பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில் கிழக்கு பெங்களூருவின் பாபுசபால்யா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் 17 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது.
கனமழை: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கனமழை பெய்து வரும் நிலையில் கிழக்கு பெங்களூருவின் பாபுசபால்யா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் 17 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெங்களூரில் உள்ள கெங்கேரி பகுதியில் நடந்து சென்ற சீனிவாஸ் என்ற சிறுவனும், அவனது தங்கை லட்சுமியும் மழை நீரில் சிக்கி அருகிலிருந்த ஏரிக்குள் விழுந்தனர். இருவரும் நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரது உடலை தேடும் பணியானது நடந்து வருகிறது.
Also Read: Diwali Bonus : ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தீபாவளி போனஸ் அறிவித்த அரசு.. எவ்வளவு தெரியுமா?
கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கர்நாடக மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளநீர் நிறைந்திருக்கிறது. அனைத்து விதமான வாகனங்களும் தண்ணீரில் மிதந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
நேற்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று வழக்கம் போல பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனிடையே கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெங்களூருவில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்கு தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவு நீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்படுட்டுள்ளது. பெங்களூரு மாவட்ட நிர்வாகம் மற்றும் கர்நாடகா மாநில அரசு மழைவெள்ள பாதிப்பில் இருந்து மக்களுக்கு தீர்வளிக்கும் நடவடிக்கையில் களம் கண்டுள்ளது.
BENGALURU city needs a strong, powerful & solely dedicated MINISTER & MAYOR to look into the city’s needs, who can be held accountable for the city’s Urban infrastructure#KarnatakaRains #BengaluruRains #BangaloreRains #Bangalore pic.twitter.com/tdIfTD7PC9
— Karnataka Weather (@Bnglrweatherman) October 22, 2024
அதே சமயம் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள நீரில் சிக்கியுள்ள பொதுமக்களை ரப்பர் படகு மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐடி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அதிகம் நிறைந்த பெங்களூரில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.