Viral Video : போட்டோஷூட்டுக்கு நடுவே வந்த ரயில்.. 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி.. அடுத்து நடந்தது என்ன?
Couple Photoshoot | ராஜஸ்தான் மாநிலம் பலியை சேர்ந்த புதுமன தம்பதியினர், கோர்மகட் ரயில் பாலத்தின் மீது நின்று போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாதையில் ரயில் வந்துள்ளதுள்ளது. இதனால் செய்வது அறியாமல் தவித்த தம்பதி, 90 அடி ரயில் பாலத்தின் மீது இருந்து கீழே குதித்துள்ளனர்.
பாலத்தில் இருந்து குதித்த தம்பதி : சமீப காலமாக திருமணங்களில் சடங்குகள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ அந்த அளவிற்கு போட்டோ ஷூட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது நடைபெறும் திருமணங்களில் ப்ரீ வெட்டிங், வெட்டி மற்றும் போஸ்ட் வெட்டிங் என அனைத்திற்கும் போட்டோஷூட் நடத்தப்படுகிறது. இதற்காக வித்தியாசமான ஆடைகள் அணிவது, வெளிநாடுகளுக்கு செல்வது அல்லது வித்தியாசமான இடங்களை தேர்வு செவது என தங்களுக்கு பிடித்தவாறு போட்டோஷூட் எடுக்கின்றனர். அந்த வகையில் ரயில் தண்டவாளத்தில் வித்தியாசமாக போட்டோஷூட் எடுக்க முயற்சித்த இளம் ஜோடிகள், தற்போது உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோகத்தில் முடிந்த போட்டோஷூட்
ராஜஸ்தான் மாநிலம் பலியை சேர்ந்த புதுமன தம்பதியினர், கோர்மகட் ரயில் பாலத்தின் மீது நின்று போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாதையில் ரயில் வந்துள்ளதுள்ளது. இதனால் செய்வது அறியாமல் தவித்த தம்பதி, 90 அடி ரயில் பாலத்தின் மீது இருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் பலத்த காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அதிலும் குறிப்பாக கணவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்த சம்பத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரயில் நெருங்கி வருவதை கண்ட தம்பதியினர், பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
In Pali, Rajasthan, a couple jumped into a 90-foot ditch to avoid a train during a photo shoot. Stupid People everywhere
This reel generation by god 👺
pic.twitter.com/m1eBPVhkcI— Piku (@RisingPiku) July 14, 2024
இந்த விபத்து நடந்த கோர்மகட் ரயில் பாலம் மக்கள் மத்தியில் போட்டோஷூட் எடுக்க சிறந்த இடமாக கருதப்படுவதாகவும் அதில் ஆபத்துகள் நிறைந்திருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி வரும் காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க, அந்த இடத்தில் பாதுகாப்பை பலபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : காசாவை நிலைகுலைய வைத்த வான்வழி தாக்குதல்… சர்வ நாசமாக்கிய இஸ்ரேல் பாதுகாப்பு படை.. என்னாச்சு?
போட்டோஷூட் எடுக்கச் சென்ற தம்பதி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.