5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: அமேசான் டெலிவரியில் வந்த பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Delivery Box with Cobra: பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர், சமீபத்திய அமேசான் டெலிவரியைப் பெற்றபோது எதிர்பாராத விதமாக அந்த பார்சலில் நாகப்பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்த தம்பதியினர் உடனடியாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பார்சலில் இருந்து நாகப்பாம்பு வெளியே வர முடியாமல் இருந்த காரணத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து அமேசான் நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில் அமேசான் குழு ஒன்று நேரில் வந்து விசாரணை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Watch Video: அமேசான் டெலிவரியில் வந்த பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
பார்சலில் வந்த நாகப்பாம்பு
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 19 Jun 2024 17:13 PM

பெங்களூரு – அமேசான் டெலிவரி: பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர், சமீபத்திய அமேசான் டெலிவரியைப் பெற்றபோது எதிர்பாராத விதமாக அந்த பார்சலில் நாகப்பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளர்களான அவர்கள், சமீபத்தில் அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கண்டோலர் ஒன்றை ஆடர் செய்துள்ளனர். அந்த பார்சலை வாங்க மிகவும் ஆர்வமாக இருந்த அந்த தம்பதியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் எக்ஸ்பாக்ஸ் கண்டோலருக்கு பதிலாக விஷமுள்ள நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை அந்த தம்பதியினர் உடனடியாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பார்சலில் இருந்து நாகப்பாம்பு வெளியே வர முடியாமல் இருந்த காரணத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பெங்களூருவில் சர்ஜாபூர் சாலையில் வசிக்கும் தம்பதியினர் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கேமிங் சாதனத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து இருந்தனர். அமேசானின் கொரியர் சேவையால் உடனடியாக டெலிவரி செய்யப்பட்ட பெட்டியை ஆவலுடன் பெற்றுள்ளனர். இருப்பினும், அந்த பெட்டியின் ஸ்டிக்கரில் பாம்பின் தோல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் நன்கு உற்று நோக்கியதும் அது விஷம் நிறைந்த நாகப்பாம்பு என தெரிய வந்தது. இதனால் அந்த தம்பதியினர் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இணையத்தில் அவர்கள் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையில் தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பத்திரமாக மீட்டு வனத்திற்குள் விடுவித்தனர். இந்த சம்பவத்திற்கு அமேசான் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அந்த பதிவில், “ அமேசான் ஆர்டரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைப் பற்றி அறிந்து வருந்துகிறோம். இதை நாங்கள் சரிபார்க்க விரும்புகிறோம். தேவையான விவரங்களை இங்கே பகிரவும்: https://amzn.to/3RvxarV, எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்பு கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. தலைநகர் சென்னையில் எப்படி ?

Latest News