5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கோவாக்சினால் ஆபத்தான பக்க விளைவுகளா? ஆய்வு குறித்து விளக்கமளித்த ஐசிஎம்ஆர்

கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில், இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. பானரஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை. தொழில்நுட்ப உதவி அல்லது நிதி உதவி எதையும் நாங்கள் செய்யவில்லை. இவர்களின் ஆய்வு முடிவுகள் பொருத்தமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த பக்க விளைவுகள் கோவாக்சின் தடுப்பூசியல் தான் ஏற்படுகிறது என்பதை கூற முடியாது என்று கூறியது.

கோவாக்சினால் ஆபத்தான பக்க விளைவுகளா? ஆய்வு குறித்து விளக்கமளித்த ஐசிஎம்ஆர்
கோவாக்சின் தடுப்பூசி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 May 2024 11:57 AM

கோவாக்சின் தடுப்பூசி: 2019ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கமும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பும், உலகம் முழுவதும் சந்தித்த ஊரடங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது தான், உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்திருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி என்றே சொல்லலாம். இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பு ஏற்படுவதாக பல்வேறு அறிக்கைகள் கூறி வருகின்றனர். சமீபத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்று அந்நிறுவனமே ஒப்புக்கொண்டது.

பக்க விளைவுகளா?

இதனை தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. பனாரஸ் பல்கலைக்கழகம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட 926 நபர்களிடன் ஆய்வு நடத்தியதில்,  கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றில் ஒருவருக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்தது.

Also Read : ஒடிசாவில் தமிழரை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்

ஜனவரி 2022 மற்றும் ஆகஸ்ட் 2023க்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில், 50 சதவிகிதம் பேருக்கு சுவாச நோய்த்தொற்றுகள் இருப்பதாகவும், 30 சதவிகிதத்திற்கு அதிகமானோருக்கு தோல் மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள் முதல் எலும்பு மற்றும் தசைப் பிரச்சனைகள் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 4.6 சதவீத பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், இளைஞர்கள் 10.5 சதவீத பேருக்கு தோல் பிரச்னகைள் ஏற்பட்டதாகவும், 10.2 பேருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் விளக்கம்:

இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி குறித்து பானரஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தவறுகள் இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலான ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் தலைவர் ராஜீவ் பாஹ்ல் கூறுகையில், “இந்த ஆய்வுகளில் தவறுகள் உள்ளது. இந்த ஆய்வுக்கும் ஐசிஎம்ஆர்க்கும் எந்த தொடர்பும் இல்லை. பானரஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை. தொழில்நுட்ப உதவி அல்லது நிதி உதவி எதையும் நாங்கள் செய்யவில்லை. இவர்களின் ஆய்வு முடிவுகள் பொருத்தமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த ஆய்வில் தடுப்பூசி போடதவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. இந்த பக்க விளைவுகள் கோவாக்சின் தடுப்பூசியல் தான் ஏற்படுகிறது என்பதை கூற முடியாது. எனவே, ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும். பிழையான ஆய்வு முடிவுகளை வெளியிட்டது தவறு. ஆய்வு முடிவுகளில் ஐசிஎம்ஆர் பெயர் நீக்க வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read : சத்தீஸ்கரில் வேன் கவிழ்ந்து விபத்து.. 18 பேர் உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் சோகம்!

Latest News