5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: ஆந்திராவில் கோர சம்பவம்.. திருமணம் செய்ய கேட்ட 16 வயது சிறுமி எரித்துக்கொலை!

கடப்பா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பத்வேலு என்ற பகுதியில் 16 வயது சிறுமி மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் விக்னேஷ் என்ற நபர் திட்டமிட்டு ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவன் கைது செய்யப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Crime: ஆந்திராவில் கோர சம்பவம்.. திருமணம் செய்ய கேட்ட 16 வயது சிறுமி எரித்துக்கொலை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 Nov 2024 17:02 PM

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பத்வேலு என்ற பகுதியில் 16 வயது சிறுமி மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் விக்னேஷ் என்ற நபர் திட்டமிட்டு ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவன் கைது செய்யப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் விக்னேஷ் தெரிவித்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனிடையே இன்றைய தினம் (அக்டோபர் 20) கடப்பா மாவட்ட எஸ்பி ஹர்ஷ்வர்தன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் வழக்கு தொடர்பான விவரங்களைத் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷூக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிமுகம் இருந்துள்ளது. விக்னேஷ் தற்போது தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அதேசமயம் அவர் கடப்பாவில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராகவும் பணியாற்றி வருகிறார்.

Also Read: Power Cut : தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு நாளை மின்தடை.. பட்டியல் இதோ!

இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி மாணவிக்கு போன் செய்துள்ளார். அதில் தன்னை சந்திக்க வேண்டும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி நேற்று (அக்டோபர் 19) தான் படிக்கும் கல்லூரியில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றுள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரியில் விக்னேஷூம் வழியில் அதே ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோ பத்வேலுவில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள செஞ்சுரி ஃப்ளைவுட் தொழிற்சாலை அருகே சென்ற நிலையில் இருவரும் இறங்கியுள்ளனர். அப்போது அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இருவரும் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், அச்சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார் என எஸ்பி ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

மேலும் சிறுமியை தீ வைத்து எரித்த நிலையில் குற்றவாளியான விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். , சிறுமி அலறியதைக் கேட்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தவகல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். கடப்பாவில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கொல்லப்பட்ட சிறுமி விக்னேஷிடம் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என நீண்ட காலமாக வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை ஏதாவது செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் வேண்டுமென்றே விக்னேஷ் அழைத்தார். மேலும் அவன் கடப்பாவில் இருந்து வரும்போது பையில் பெட்ரோல் பாட்டிலை வைத்துக்கொண்டு சென்றுள்ளான்.

Also Read: Chandrababu Naidu: 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் சீட்.. சந்திரபாபு நாயுடு அதிரடி!

5 ஆண்டுகால பழக்கத்தில் அப்பெண் திருமணம் செய்யும் முடிவில் இருந்ததால்விக்னேஷ் சிறிது காலம் அவரை ஒதுக்கி வைத்துள்ளான். அதன் பிறகு இருவரும் மீண்டும் பேச தொடங்கி நெருக்கமாயுள்ளனர். அந்த வகையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி அழுத்தம் கொடுத்ததால் விக்னேஷ் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான். கொலை நடந்த சம்பவ இடத்தில் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளோம். விரைவு நீதிமன்றம் மூலம் குற்றவாளி விரைவில் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வோம்’ என எஸ்பி ஹர்ஷ்வர்த்தன் கூறினார்.

இந்நிலையில் பெட்ரோல் ஊற்றி சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சிறப்பு விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் குற்றவாளிக்கு மரண தண்டனை அளவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் “பத்வேலில் இளைஞரின் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் என்னை மிகவும் வருத்தியது. எதிர்காலம் அதிகம் உள்ள ஒரு சிறுமி பலியாகி இருப்பது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். கொலையாளியை விரைவாகவும் சட்ட ரீதியாகவும் கடுமையாகவும் தண்டிக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் சம்பவத்தின் தண்டனை ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தேன்’ என தெரிவித்துள்ளார்.

Latest News