Crime: உறவினர் வீட்டில் நகை திருட்டு.. கேரளா இன்ஸ்டா பிரபலம் கைது!

Kerala: கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பஜன்மத் பகுதியில் உள்ள முபினாவின் உறவினர் வீட்டில் சுமார் 10 பவுன் நகைகள் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்த நிலையில் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினார். வீட்டின் கதவு, ஜன்னல் என எதுவுமே உடைக்கப்படாமல் இந்த திருட்டு நடந்ததால் கண்டிப்பாக வெளியாட்கள் செய்திருக்க முடியாது என கண்டறிந்தனர்.

Crime: உறவினர் வீட்டில் நகை திருட்டு.. கேரளா இன்ஸ்டா பிரபலம் கைது!

கைது செய்யப்பட்ட முபினா

Updated On: 

04 Nov 2024 17:00 PM

இன்ஸ்டா பிரபலம் கைது: கேரளாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் நகைகள் திருடியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் முபினா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக இந்த திருட்டில் ஈடுபட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பஜன்மத் பகுதியில் உள்ள முபினாவின் உறவினர் வீட்டில் சுமார் 10 பவுன் நகைகள் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்த நிலையில் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினார். வீட்டின் கதவு, ஜன்னல் என எதுவுமே உடைக்கப்படாமல் இந்த திருட்டு நடந்ததால் கண்டிப்பாக வெளியாட்கள் செய்திருக்க முடியாது என கண்டறிந்தனர்.

Also Read: Diwali Special Bus: இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. சென்னை மக்கள் எங்கு செல்ல வேண்டும்?

பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு குற்றவாளி யார் என்பது தெரிய வந்தது. அதன்படி சிசிடிவி காட்சிகளில் சம்பவம் நடந்த அன்று அந்த வீட்டு அருகில் முபினா வந்து செல்வதை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது முபினாவின் உறவினர்கள் எப்போதும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஒரு ரகசிய இடத்தில் வைத்து செல்வது வழக்கம். அந்த இடம் முபினாவுக்கு தெரியும் என்பதால் அவர் திட்டமிட்டபடி துணிச்சலாக இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

Also Read: சார்ஜர் மூலம் தாக்கிய மின்சாரம்.. தெலங்கானாவில் இளைஞர் உயிரிழப்பு

அதன்படி உறவினர்கள் வீட்டில் இல்லாத அன்று அந்த சாவியை எடுத்து வீட்டின் உள்ளே சென்று  அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் அனைத்தையும் திருடியுள்ளார்.  பின்னர் வீட்டை வழக்கம்போல் பூட்டிவிட்டு சாவியையும் இருந்த இடத்தில் வைத்து விட்டு வ்வீடு திரும்பியுள்ளார். ஆனால் முதலில் திருடியதை முபினா ஒப்புக்கொள்ளவே இல்லை. சிசிடிவி காட்சிகளை காட்டியதன் அடிப்படையில் தான் வசமாக சிக்கிக்கொண்டே பின்பே உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதேபோன்று முபினா தனது தோழி ஒருவரின் வீட்டிலும் திருடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிற்றார் பகுதியை சேர்ந்த  தோழி வீட்டில் 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டது. பின்னர் இந்த திருட்டில் முபினா தான் ஈடுபட்டது கண்டிபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் முபினாவால் திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் அதனை அடகு வைத்ததற்கான ரசீது ஆகியவை போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அடகு வைக்கப்பட்ட இடத்திலும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் சாதாரண ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான முபினாவின் கணவர் வெளியூருக்கு சென்று இருக்கும் நிலையில் அவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட முபினா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்