5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: காதலனை சந்தித்த திருமணமான பெண்.. கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்!

வீடியோவில், சம்பந்தப்பட்ட பெண்ணை கிராம மக்கள் சேர்ந்து மரத்தில் கட்டியிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்பெண்ணின் காதலனின் கைகளை பின்னால் கட்டிய நிலையில் அவர் சாலையில் கிடக்கிறார். கிராமவாசிகள் சிலர் தம்பதியினரை தாக்குகின்றனர்.   பல சுற்றியிருந்து வேடிக்கை பார்க்கும் பலரும் அந்த  தாக்குதலை ஊக்குவிக்கிறார்கள். கிராமவாசிகள் இரக்கமின்றி அந்தப் பெண்ணை அடிப்பதையும், வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Crime: காதலனை சந்தித்த திருமணமான பெண்.. கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்!
பெண் தாக்கப்பட்ட காட்சி
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 22 Oct 2024 17:37 PM

பெண் மீது தாக்குதல்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணமான பெண் தனது காதலனை சந்தித்ததால் கிராம மக்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அரசியல் தொகுதியான ரேபரேலியில் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட பெண்ணை கிராம மக்கள் சேர்ந்து மரத்தில் கட்டியிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்பெண்ணின் காதலனின் கைகளை பின்னால் கட்டிய நிலையில் அவர் சாலையில் கிடக்கிறார். கிராமவாசிகள் சிலர் தம்பதியினரை தாக்குகின்றனர்.   பல சுற்றியிருந்து வேடிக்கை பார்க்கும் பலரும் அந்த  தாக்குதலை ஊக்குவிக்கிறார்கள். கிராமவாசிகள் இரக்கமின்றி அந்தப் பெண்ணை அடிப்பதையும், வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Also Read: Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

அதேசமயம் அருகிலுள்ள மற்ற பெண்கள் அந்த பெண்ணை துன்புறுத்த வேண்டாம் என்று வற்புறுத்துகிறார்கள். ஆனாலும் தொடர்ச்சியாக இருவர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. மேலும் இந்த வீடியோ எடுக்க தொடங்கும் முன்பே அப்பெண்ணை தாக்கியதில் அவர் ஆடைகள் கிழிந்து விட்டது போல தெரிகிறது. இதனால் அப்பெண் இருக்கும் ஆடையைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தொடர்ச்சியாக முயற்சிக்கிறார். அப்போது கூட்டத்தில் இருக்கும் ஒருவன், “அவள் கைகளைக் கட்டி இருக்கட்டும். அவள் நிர்வாணமாக நிற்கட்டும்” என தெரிவிக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்களின்படி, குர்கானில் பணிபுரியும் நபரை மணந்த பெண் தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காக திருமணமான பெண்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் கர்வா சௌத் நோன்பு இருக்காமல் தவிர்க்க தனது காதலரை அழைத்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் ரகசியமாக சந்தித்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தை அறிந்த கிராம மக்கள், கோபமடைந்து தங்கள் கைகளில் விஷயத்தை எடுத்து இருவருக்கும் தண்டனைக் கொடுக்க முடிவு செய்தனர்.

Also Read: காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் போட்டு தள்ளிய மனைவி.. அதிர்ச்சி காரணம்!

அதன்படி, சம்பந்தப்பட்ட பெண் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு மரத்தில்  கட்டி வைக்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது காதலனின் கையும், காலும் கயிற்றால் கட்டப்பட்டதால் அவர் தரையில் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அவர்களைச் சுற்றி திரண்ட நிலையில், அந்தப் பெண் கடுமையாக தாக்கப்பட்டார். மேலும் கிராம மக்கள் அவரது ஆடைகளை பலமுறை இழுத்தது நிர்வாணப்படுத்த முயன்றுள்ளனர். சுற்றிலும் கிராமத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் இருந்தபோதிலும், இந்த கொடூர தாக்குதலை தடுக்க யாரும் முன்வரவில்லை. மேலும் தம்பதியினர் பல மணி நேரம் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ரேபரேலி போலீசார் முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மற்றொரு சம்பவம் 

இதனிடையே உத்தரப்பிரதேசம் மாநிலம் இஸ்லாமில்பூர் பகுதியில் கர்வா சவுத் என்ற பண்டிகை நேற்று கடைபிடிக்கப்பட்டது. வட மாநிலங்களில் கணவன் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டி பெண்கள் விரதம் இருப்பதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் அங்கு வசித்து வரும் சவிதா என்ற பெண் தனது கணவர் சைலேஷூக்காக நேற்று காலையில் விரதம் இருந்தார். இதற்கு கணவரும் உதவியாக இருந்த நிலையில் மாலையில் சவிதா விரதத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற சில மணி நேரத்தில் அவரது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது சவிதா பக்கத்து வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். அதேசமயம் சாப்பிட்டு கொண்டிருந்த சைலேஷ் மயங்கி விழுந்தார். இதனிடையே சைலேஷ் சகோதரர் அகிலேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார்.

உடனடியாக சைலேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் சைலேஷ் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து அகிலேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சவிதாவை கைது செய்தனர்.

Latest News