Crime: பணக்கார இளைஞர்கள் டார்கெட்.. நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்.. இளம்பெண் கைது!

ஜமீமா அமெரிக்காவில் இருந்த அந்த இளைஞருக்கு ஆசை வார்த்தை கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்துள்ளார்.  நேராக விமான நிலையம் சென்ற ஜமீமா அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு முரளி நகரில் உள்ள தனது வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் நேரத்தை கழித்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் ஜமீமா குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து அந்த இளைஞருக்கு கொடுத்துள்ளார்.

Crime: பணக்கார இளைஞர்கள் டார்கெட்.. நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்.. இளம்பெண் கைது!

கைது செய்யப்பட்ட ஜமீமா

Published: 

08 Oct 2024 09:20 AM

இளம்பெண் கைது: ஆந்திராவில் இளைஞர்களை குறி வைத்து ஆசை காட்டி பணம் பறித்த 27 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தான் இந்த அதிர்ச்சியடைய வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஷீலா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்று உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, விசாகப்பட்டினத்தில் ஷீலா நகருக்கு அருகே உள்ள முரளி நகரை சேர்ந்த ஜமீமா என்ற 27 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பேசத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச தொடங்கிய அப்பெண் நாளடைவில் இளைஞரை காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் வழியாக காதலை வளர்த்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே அந்த இளைஞரின் பெற்றோர் அமெரிக்காவிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு வந்துள்ளனர். இதனையறிந்த ஜமீமா அவர்களின் வீட்டுக்கு சென்று நெருங்கி பழகியுள்ளார். முதலில் குடும்பத்தினரும் இதனை சாதாரணமாக எடுத்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அப்பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் அந்த இளைஞரின் பெற்றோரிடம் உங்கள் மகனை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாக ஜமீமா தெரிவித்துள்ளார்.  அதற்கு அந்த இளைஞரின் பெற்றோர் சம்மதிக்காமல் இருந்தனர்.

Also Read: Zomato: சொமேட்டோ சிஇஓவுக்கு நேர்ந்த கதி.. அலர்ட்டான நிர்வாகம்.. ஊழியர்கள் ஹேப்பி!

இதனால் அதிருப்தியடைந்த ஜமீமா அமெரிக்காவில் இருந்த அந்த இளைஞருக்கு ஆசை வார்த்தை கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்திற்கு வரவழைத்துள்ளார்.  நேராக விமான நிலையம் சென்ற ஜமீமா அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு முரளி நகரில் உள்ள தனது வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் நேரத்தை கழித்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் ஜமீமா குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து அந்த இளைஞருக்கு கொடுத்துள்ளார்.

இதனால் அவர் மயக்கமடையவே தொடர்ந்து அந்த இளைஞரின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக அந்த இளைஞருடன் ஜமீமா ஆபாசமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மயக்கம் தெளிந்த இளைஞரிடம் ஆபாச படங்களை எல்லாம் காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த இளைஞர் மறுத்ததால் ஜமீமா கொலை மிரட்டலும் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிமிலியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அந்த இளைஞரை ரூ.5 லட்சம் செலவு செய்து வைத்து தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்ய ஜமீமா வைத்துள்ளார்.

மேலும் அந்த இளைஞரை தனது வீட்டில் அடைத்து வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இந்த ஆபாச புகைப்படங்களை எல்லாம் போலீஸில் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய வைப்பேன் என ஜமீமா மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன அந்த இளைஞர் செய்வதறியாது திகைத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஜமீமாவுக்கு கொடுத்து எப்படியாவது அங்கிருந்த தப்பிக்க முயற்சித்துள்ளார்.

Also Read: Navrathiri: அப்படிப்போடு.. நவராத்திரி பண்டிகைக்கு பாடல் எழுதிய பிரதமர் மோடி!

அதன்படி சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டிலிருந்து தப்பிக்க முயன்ற போது தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜமீமா அந்த இளைஞரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றுள்ளார். இதனால் காயமடைந்த அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜமீமாவின் நண்பர்களும் இளைஞர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இப்படியான நிலையில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளைஞர் ஜமீமா வீட்டில் இருந்து சென்று தப்பியுள்ளார். நேராக பிமிலி காவல் நிலையம் சென்று போலீசாரிடம் ஜமீமா உள்ளிட்ட அனைவரையும் பற்றி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம்பெண் ஜமீமாவை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து லேப்டாப், டேப், 3 செல்போன்கள் மற்றும் கார் ஆகிய அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜமீமாவும், அவரது கூட்டாளிகளும் பணக்கார இளைஞர்களை குறிவைத்து காதல் என்ற பெயரில்  போதை மருந்து கொடுத்து ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதை நோக்கமாக கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஜமீமாவால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் போலீசில் புகாரளிக்க முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?