Cyclone Fengal: வெள்ள பாதிப்பு! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Puducherry Govt: ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், பல இடங்களில் நிலச்சரிவும், மின்சார விநியோகமும் தடைப்பட்டது.

Cyclone Fengal: வெள்ள பாதிப்பு! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

வெள்ள மீட்பு பணி - முதலமைச்சர் ரங்கசாமி (Image: twitter and pti)

Published: 

02 Dec 2024 17:01 PM

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக மிக கனமழை பெய்து வருகிறது. நேற்று டிசம்பர் 1ம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 48.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் பொழிந்த கனமழை காரணமாக வெள்ள நீரால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டு, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தனர். இந்தநிலையில், புதுச்சேரியில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5,000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ. 30,000 வழங்கப்படும் என்றும், வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ரூ. 40,000 மற்றும் இளம் கன்றுக்குட்டிக்கு ரூ. 30,000 வழங்கப்படும், படகு ஒன்றுக்கு ரூ. 10,000 என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ: Fengal Cyclone: வெள்ளத்தால் ஸ்தம்பித்த விழுப்புரம்.. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!

ராணுவம் மூலம் மீட்பு:

புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மீட்பு பற்றி பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சென்னை இருந்து வந்த ராணுவ மீட்டு குழுவினர் அதிகாலை முதல் புதுச்சேரியில் கிருஷ்ணாநகர் உள்ளிட்ட 3 பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, கிருஷ்ணாநகரில் 5 அடி வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 500 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் தடைபட்ட மின்விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

இன்றும் விடாத மழை:

ஃபெஞ்சல் புயலால் தற்போது வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், இலங்கையில் 15 பேரும், சென்னையில் 3 பேரும் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை துணை ராணுவம் மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்கிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

முன்னதாக, ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், பல இடங்களில் நிலச்சரிவும், மின்சார விநியோகமும் தடைப்பட்டது.

ALSO READ: Krishnagiri: திக்குமுக்காடும் கிருஷ்ணகிரி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

நேற்று காலை வரை புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 48.4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1995 முதல் 2024 வரை 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். முன்னதாக, கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் 21 செ.மீ மழை பதிவாகி இருந்ததே அதிகபட்சமாக பதிவாகி இருந்தது. தற்போது இதை ஃபெஞ்சல் புயல் முறியடித்துள்ளது.

 

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..
குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?