Cyclone Remal: கரையை கடந்தது ரீமல் புயல்.. மேற்கு வங்கம், வங்க தேசத்தில் பலத்த சேதம்!
ரீமல் இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது. வங்க தேச – கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் – சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடந்தது. கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 135 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசியது. தீவிர புயலானது இன்று காலைக்குள் படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடந்தது ரீமல் புயல்: கடந்த 25ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு ‘ரீமல்’ புயலாக வலுப்பெற்று, நேற்று காலை 05.30 மணி அளவில் “தீவிர புயலாக” வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இந்த புயல் நேற்று காலை 08.30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது வடக்கு திசையில் நகர்ந்து, இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது. வங்க தேச – கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் – சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடந்தது.
Also Read: காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? பிரசாந்த் கிஷோர் நறுக்!
மேற்கு வங்கம், வங்க தேசத்தில் பலத்த சேதம்:
கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 135 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசியது. தீவிர புயலானது இன்று காலைக்குள் படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. கொல்கத்தா அருகே தாழ்வான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் என பல சேதம் அடைந்தன. இதனால், ஒருவர் காயம் அடைந்தார்.
#WATCH | West Bengal: Several trees uprooted in Alipore area
Heavy rain and gusty winds lashed several parts of West Bengal last night as Cyclone ‘Remal’ made landfall. pic.twitter.com/fHidy5xQzn
— ANI (@ANI) May 27, 2024
புயல் தாக்குவதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சாகர் தீவு, சுந்தரவனம் மற்றும் காக்த்வீப் ஆகிய பகுதிகளில் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சேதம் அடைந்த பகுதியில் மீட்புப் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். நிவாரணப் பணிகளுக்காக மாநில பேரிடர் மீட்பு குழுக்களையும் மாநில அரசு தயார் செய்துள்ளது. ஒன்பது பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், புயலின் தாக்கம் காரணமாக மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்கள் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹவுரா, ஹூக்ளி ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
Also Read: அடுத்த 5 நாட்களுக்கு கொளுத்தப்போகும் கோடை வெயில்.. வானிலை மையம் எச்சரிக்கை!