Lunar Eclipse 2024: நடப்பாண்டின் 2வது சந்திர கிரகணம்.. எங்கு, எப்படி பார்க்கலாம்? - Tamil News | date time and how to watch September Lunar Eclipse 2024 | TV9 Tamil

Lunar Eclipse 2024: நடப்பாண்டின் 2வது சந்திர கிரகணம்.. எங்கு, எப்படி பார்க்கலாம்?

Published: 

11 Sep 2024 08:10 AM

நடப்பாண்டை பொறுத்தவரை இரண்டு சந்திர கிரகணங்கள் வருகிறது. அதில் முதல் சந்திர கிரகணம் ஏற்கனவே கடந்த மார்ச் 25ஆம் தேதி நிகழ்ந்து விட்டது. இப்படியான நிலையில் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நிகழவுள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல நாடுகளிலும் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

Lunar Eclipse 2024: நடப்பாண்டின் 2வது சந்திர கிரகணம்.. எங்கு, எப்படி பார்க்கலாம்?

கோப்பு புகைப்படம்

Follow Us On

சந்திர கிரகணம்: வானில் நிகழும் மாற்றங்கள் எப்போது நமக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகிய நிகழ்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை தோன்றுவது வழக்கம். இதில் நடப்பாண்டை பொறுத்தவரை இரண்டு சந்திர கிரகணங்கள் வருகிறது. அதில் முதல் சந்திர கிரகணம் ஏற்கனவே கடந்த மார்ச் 25ஆம் தேதி நிகழ்ந்து விட்டது. இப்படியான நிலையில் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நிகழவுள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல நாடுகளிலும் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: Tirunelveli Crime: எதிர்வீட்டு குழந்தை கொலை.. வாஷிங்மெஷினில் அடைத்து வைத்த பெண்.. நடந்தது என்ன?

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் செய்வதே சந்திர கிரகணம் ஆகும். நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து சந்திர கிரகணம் நீடிக்கும் கால அளவு வேறுபடும். சூரிய ஒளியை பூமி முற்றிலும் தடுப்பதால் வளிமண்டலத்தில் உள்ள தூசு சூரிய ஒளியைச் சிதறடிக்கிறது. இதனால் ராலே ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். சில நாடுகளில் முழு சந்திர கிரகணமும், சில நாடுகளில் பகுதியளவு சந்திர கிரகணமும் நாம் காணலாம்.

கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெற்றது. இதனால் நிலவு இரத்த நிறத்தில் சிவப்பாக காட்சியளித்தது. இது அறிவியல்படி குருதி நிலவு என்று அழைக்கப்படுகிறது. காரணம் அந்நாளில் பௌர்ணமி, முழு சந்திர கிரகணம் என அனைத்தும் ஒன்றாக வந்தது.இதே தருணம் 19 வருடங்கள் கழித்து 2037 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் காலை 10.17 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 4  மணி நேரம் 6 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, என சந்திர கிரகண சமயத்தில் இரவு நேரமாக இருக்கும் நாடுகளில் சிறப்பாக தெரியும். அதே சமயம் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்களில் பெனும்பிரல் கட்டம் மட்டுமே தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Electric Vehicle : இ காமர்ஸ் நிறுவனங்களை மின்சார வாகனம் பயன்படுத்த கூறும் வாடிக்கையாளர்கள்.. ஏன் தெரியுமா?

பெனும்பிரல் சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் நேரடியாக சந்திரனின் மேற்பரப்பில் முழுமையாக விழாது. அதாவது பூமியின் மீது சூரியனின் கதிர்கள் படும்போது அது சந்திரனில் நிழலாக விழாமல் தடுப்பதே பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும். இதனால் நிலவின் தோற்றத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதன் முன் பகுதியில் ஒரு தூசி போன்ற அடுக்கு மட்டுமே காணப்படும். ஆனால் சாதாரண நாளில் நாம் பார்க்கும் நிலவை விட நிறம் மட்டும் சற்று மங்கி விடும். இந்த சந்திர கிரகணத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என சொல்லப்படுகிறது.

முழு சந்திர கிரகணம் என்றால் என்ன

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரனை மறைப்பதால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் நிலவு சிவப்பு நிறமாக மாறுவதை நாம் காணலாம். சந்திர கிரகணம் தோராயமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிகழும். ஒரு முழு சந்திர கிரகணம் என்பது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடிக்கும். ஆனால் பகுதி நேர சந்திர கிரகணம் என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நேரத்தில் தெரிவதால் அதனை கணிப்பது சற்றே கடினம்தான். இது 17 நிமிடங்கள் தொடங்கி 236 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version