பானி பூரியை தொடர்ந்து ஷவர்மாவிலும் ஆபத்து.. கொடிய கிருமிகள் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Shawarma | பானி பூரியை தொடர்ந்து ஷவர்மாவிலும் கொடிய பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் உள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக FSSAI-க்கு புகார் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட FSSAI பெரும்பாலான உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

பானி பூரியை தொடர்ந்து ஷவர்மாவிலும் ஆபத்து.. கொடிய கிருமிகள் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஷவர்மா

Updated On: 

03 Jul 2024 14:12 PM

பானி பூரி : சாலையோர உணவுகள் பலருக்கு பிடித்த ஒன்றாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக சில சாலையோர உணவகங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. அந்த அளவிற்கு சாலையோர உணவுகளும், உணவகங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. சாலையோர உணவகங்கள் என்றாலே பானி பூரி, ஷவர்மா போன்ற உணவுகள் கட்டாயம் இருக்கும். அவை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் அவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். அவை எவ்வளவு சுவை மிகுந்தவையோ அவ்வளவு ஆபத்தானவை. அவை உடலில் பல பிரச்னைகளை உருவாக்கும் என கூறப்படுகிறது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சோதனை அமைப்பு (FSSAI) சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் பல்வேறு உணவு மாதிரிகளை சேகரித்து அதன் தரத்தை சோதனை செய்தது. அறிக்கையின் படி, FSSAI அதிகாரிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்துள்ளனர். சாலையோர கடைகள் மட்டுமன்றி ஆடம்பர உணவகங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலான உணவு மாதிரிகள் தரமற்றதாகவும், மனித உடல் நலத்திற்கு தீங்கு விலைவிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் சேகரிக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 8 உணவு மாதிரிகள் சுகாதாரமற்றதாக இருந்துள்ளது. அவற்றில் உடலுக்கு தீங்கு விலைவிக்கும் பாக்டீரியா, ஈஸ்ட் உள்ளிட்டவை இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் FSSAI அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 22% பானி பூரி மாதிரிகள் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கை உணவு நிறங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. FSSAI கர்நாடகா முழுவதும் சுமார் 79 இடங்களில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்துள்ளது. அதில் 49 பெங்களூரில் இருந்து சேகரிக்கப்பட்டவை. கர்நாடகாவில் தரமற்ற பானிபூரிகள் விற்பனை செய்யப்படுவதாக FSSAI-க்கு புகார் வந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி மொத்தம் சேகரிக்கப்பட்ட 260 மாதிரிகளில் 41 மாதிரிகளில் புற்றுநோயை உருவாக்க செயற்கை நிறமூட்டிகள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 18 உணவு மாதிரிகள் தரமற்ற முறையில் இருந்ததாகவும் கூறாப்படுகிறது. FSSAI-ன் அறிகையின் படி, நீல, மஞ்சல் நிற ரசாயனங்கள் சுகாதாரமற்றதாக இருந்துள்ளது. இதுபோன்ற ரசாயனங்களை உட்கொள்வதன் மூலம் வயிற்று வலி, இதய கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க : Fire Accident: மாநகர பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.. 30 நிமிட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்த வீரர்கள்..

முன்னதாக ரோடமைன் -பி செயற்கை நிறமூட்டியை கர்நாடகா அரசு தடை செய்தது. அவை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட உணவு பொருட்களில் கலக்கப்பட்டு வந்தது. இந்த ரசாயன பயன்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கைம் எடுப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!