கொடூர விபத்து.. 100 கி.மீ வேகத்தில் லாரி மீது பாய்ந்த கார்.. உடல் சிதறி 6 மாணவர்கள் உயிரிழப்பு!

Dehradun Car Accident : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கார் விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் டேராடூனில் சாலையில் சென்ற கார், ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 மாணவர்களின் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கொடூர விபத்து.. 100 கி.மீ வேகத்தில் லாரி மீது பாய்ந்த கார்.. உடல் சிதறி 6 மாணவர்கள் உயிரிழப்பு!

கார் விபத்து

Updated On: 

15 Nov 2024 17:42 PM

உத்தர காண்ட் மாநிலம் டேராடூனில் கார் விபத்தில் சிக்கிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் டேராடூனில் சாலையில் சென்ற கார், ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் மாணவர்களின் உடல்கள் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலம் டேராடூனில் ஏழு நண்பர்கள் குழு அன்று இரவு ஒரு பார்ட்டிற்கு சென்றுவிட்டு திரும்பினர். காரில் இவர்கள் 7 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 7 பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் காரை 100 கீ.மீ வேகத்தில் ஓட்டியுள்ளனர்.

100 கி.மீ வேகத்தில் லாரி மீது பாய்ந்த கார்

புதிதாக வாங்கிய இன்னோவா காரில் இவர்கள் 7 பேர் பயணித்துள்ளனர். அப்போது, BMW கார் உடன் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. காரை ஓட்டிய மாணவர் ஒருவர் BMW காரை முந்திச் செல்ல மணிக்கு 100 கீ.மீ வேகத்தில் சென்றிருக்கிறார். அப்போது அந்த கார் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்,  அவர்களின் உடல்கள் சாலைகளில் ஆங்காங்கே சிதறி கிடந்திருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

ஆறு பேரின் தலையும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடூர விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.  அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் 25 வயதான சித்தேஷ் அகர்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Also Read : பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. பதறிய அதிகாரிகள்.. என்னாச்சு?

உடல் சிதறி 6 மாணவர்கள் உயிரிழப்பு

மேலும், உயிரிழந்தவர்கள் குணால் குக்ரேஜா (23), அதுல் அகர்வால் (24), ரிஷப் ஜெயின் (24), நவ்யா கோயல் (23), காமக்ஷி (20) மற்றும் குணீத் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆறு பேர் டேராடூனைச் சேர்ந்தவர்கள், குக்ரேஜா என்பவர் மட்டும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இவர்கள் எங்கு இருந்து வந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டேராடூனில் நடந்த சாலை விபத்தில் 6 இளைஞர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அந்த வேதனையைத் தாங்கும் சக்தியை அளிக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.

மதுபோதையில் இருந்த மாணவர்கள்?


போலீசாரின் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான இன்னோவா கார் சஹரன்பூரைச் சேர்ந்த பட்டாசு தொழிலதிபர் சுனில் அகர்வாலுக்கு சொந்தமானது. அவர் சமீபத்தில் அந்த காரை வாங்கினார் . அவரது மகன் அதுல் அகர்வால். இவர் தனது ஆறு நண்பர்களுடன் டேராடூனுக்கு பயணம் செய்ததாகவும், விபத்து நடந்தபோது காரை ஓட்டியபோது விபத்து நடந்துள்ளது.

Also Read : எதுக்கு 2 நாள் லீவ்? கவலைப்படும் இன்போசிஸ் நாராணய மூர்த்தி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

புதிய கார் வாங்கியதில் இருந்து அதுல் அகர்வாலின் நண்பர்கள் ட்ரீட் வைக்க வலியுறுத்தினர். இதனால் ஜக்கானில் உள்ள சித்தேஷ் அகர்வாலின் வீட்டில் கடந்த திங்கள்கிழமை இரவு அதுல் விருந்து நடத்தினார். இதன்பிறகு விருத்தை முடித்துக் கொண்டு மதுபோதையில் அதுல் காரை ஓட்டியுள்ளார். அப்போது தான் லாரி மீது கார் மோடி விபத்துக்குள்ளானது என்று கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?