Atishi Marlena : டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதிஷி மெர்லினா.. வெளியான முக்கிய தகவல்!
Delhi's New Chief Minister | மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் சிறை சென்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலையானார். 5 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். அதன்படி இன்று தனது முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்கிறார்.
டெல்லியின் அடுத்த முதலமைச்சர் அதிஷி மெர்லினா : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவை முன்னிட்டு நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்த அதிஷி மெர்லினா யார், ஆம் ஆத்மியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : West Bengal : மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்ற மம்தா.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
சிறையில் இருந்து வெளியே வந்ததும் பதவி விலகுவதாக அறிவித்த கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறை சென்றார். இந்த நிலையில் சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்ததற்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியே வந்தார். அப்போது தொண்டர்களை சந்தித்து பேசிய கெஜ்ரிவால் தான் இன்னும் 2 நாட்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : Happy Birthday Ashwin: காயத்தால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்.. கிரிக்கெட்டில் மாயாஜால மன்னன் ஆன கதை!
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலாக யார் டெல்லி முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இது குறித்து வெளியான தகவலில் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெறும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி, கெஜ்ரிவால் தலைமையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் அடுத்த முதலமைச்சராக அதிஷி மெர்லினா பெயரை முன்மொழிந்தார் கெஜ்ரிவால். கெஜ்ரிவால் முன்மொழிந்ததை தொடர்ந்து அனைத்து எம்.எல்.ஏ-க்களும் ஒப்புதல் அளித்த நிலையில் டெல்லியின் அடுத்த முதலமைச்சராக அதிஷி மெர்லினா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Benefits of Salt in Tea: டீயில் சர்க்கரைக்கு பதில் உப்பு கலந்து குடிச்சு பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!
யார் இந்த அதிஷி மெர்லினா
டெல்லியின் தற்போதைய கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் தான் அதிஷி மெர்லினா. அரவிந்த் கெஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் சிறையில் இருந்தபோது இவர் கட்சியையும், ஆட்சியையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தான் திடீரென பதவி விலக போவதாக அறிவித்ததை அடுத்து, தற்போது டெல்லியின் அடுத்த முதலமைச்சராக அதிஷி மெர்லினா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை வழங்கும்போது, அதிஷி மெர்லினாவும் தனது பதவியேற்பு கடிதத்தை ஆளுநரிடம் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : PM Modi Birthday : பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள்.. தலைவர்கள் வாழ்த்து!
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது ஏன் – அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தலைவர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்றிலிருந்து இரண்டு நாட்கள், நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்தார். என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் நான் ராஜினாமா செய்கிறேன். என் மீதும், மணீஷ் சிசோடியா மீதும் குற்றம் சாட்டினார். கெஜ்ரிவால் நேர்மையானவரா அல்லது நேர்மையற்றவரா என்பதை இன்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இன்று நான் சோதனைக்கு தயாராக இருக்கிறேன். நான் நேர்மையானவன் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு வாக்களியுங்கள். நீங்கள் என்னை வெற்றிபெறச் செய்தால்தான் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்று தெரிவித்தார்.