ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம் மீதான விசாரைணக்கு தடை.. டெல்லி உயர் நீதிமன்றம்

Aircel-Maxis case: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம் மீதான விசாரைணக்கு தடை.. டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

Published: 

20 Nov 2024 15:39 PM

ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பணமோசடி வழக்கில் ப. சிதம்பரத்துக்கும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் எதிராக ஏஜென்சி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த வழக்கில் 2021ல் விசாணைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக இருவரும் விசாரணையை எதிர்கொண்டுவந்தனர்.

விசாரணை நிறுத்தி வைப்பு

இது குறித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி, “நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அடுத்த விசாரணை தேதி வரை, மனுதாரர் மீதான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த வழக்கு ஜனவரி 22 அன்று பட்டியலிடப்படும்” என்று கூறினார்.

இதையடுத்து, விரிவான உத்தரவை பிறப்பிப்பதாகவும் நீதிபதி கூறினார். இந்த வழக்கில், ப. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் என். ஹரிஹரன் மற்றும் வழக்கறிஞர்கள் அர்ஷ்தீப் சிங் குரானா மற்றும் அக்ஷத் குப்தா ஆகியோர் ஆஜரானார்கள்.

இதையும் படிங்க : Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு.. சிபிஐக்கு மாற்றம்.. உயர்நீதிமன்றம் அதிரடி..

குற்றப் பத்திரிகை தாக்கல்- அமலாக்கத்துறை எதிர்ப்பு

அப்போது அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் மீது வழக்குத் தொடர எந்த அனுமதியும் இல்லாத நிலையில், சிறப்பு நீதிபதி பணமோசடி குற்றத்திற்கான குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டதாக வாதிட்டனர். இந்த வழக்கில், அமலாக்கத் துறை வக்கீல், மனு மீது ஆட்சேபனையை எழுப்பினார்.

முன்னதாக இந்த வழக்கு, நவம்பர் 27, 2021 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு அடுத்த தேதியில் சம்மன் அனுப்பியது.

பண மோசடி- ப. சிதம்பரம் மீது புகார்

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை (நவ. 20, 2024) அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்திற்கு எதிரான விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது.
மேலும், உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், பணமோசடி வழக்கில் அவருக்கும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் எதிராக ஏஜென்சி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கின் பின்னணி

இது, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (எஃப்ஐபிபி) அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்குகள் தொடர்பானவை.

ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது 2006 ஆம் ஆண்டு இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. நிதியமைச்சர் என்ற முறையில், ப. சிதம்பரம் தனது திறனை மீறி இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து பலன்கள் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல்.. மறுஆய்வு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?

அபர்ணா பாலமுரளியின் அழகிய போட்டோஸ் இதோ
புடவையில் கலக்கும் ராஷ்மிகா மந்தனா!
இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!