5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Delhi Exit poll 2024: டெல்லியில் இந்தக் கட்சிதான் கில்லி: TV9 எக்ஸி்ட் போல் ரிசல்ட்!

Lok sabha Elections Exit Poll 2024 Results : டிவி9 பாரத்வர்ஷா-போல்ஸ்ட்ராட்டின் படி, தேசிய தலைநகரில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தால், யூனியன் பிரதேசத்தில் 100% வெற்றி விகிதம் என்ற ஹாட்ரிக் சாதனையை அக்கட்சி எட்டிவிடும்.

Delhi Exit poll 2024: டெல்லியில் இந்தக் கட்சிதான் கில்லி: TV9 எக்ஸி்ட் போல் ரிசல்ட்!
டெல்லி மக்களவை தேர்தல்
intern
Tamil TV9 | Updated On: 01 Jun 2024 22:02 PM

2021 மக்களவை டெல்லி எக்ஸிட் போல் ரிசர்ட்: 2024 மக்களவை தேர்தலில் நிறைவு கட்ட (7ம் கட்டம்) வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1, 2024) மாலை 6 மணிக்க நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து, எக்ஸிட் போல் முடிவுகள் மாலை 6.30 மணிக்கு மேல் வெளியாகத் தொடங்கின. இந்த நிலையில் நாட்டின் தேசிய தலைநகரான டெல்லியில் வெற்றிக் கொடி நாட்டப் போவது யார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியை பொறுத்தமட்டில் மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றிக் கொடி நாட்டும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஏறக்குறைய 97 கோடி வாக்காளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் போட்டியான 2024 மக்களவைத் தேர்தல், ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து பார்க்கலாம்.

டி.வி.9 கருத்துக் கணிப்பு

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துப்படி, தேசிய தலைநகரில் பாஜக ஆறு முதல் ஏழு இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. சாந்தினி சவுக்கில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சில செய்தி சேனல்கள் இந்தியா கூட்டணி 1 அல்லது 2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளன. டிவி9 பாரத்வர்ஷா-போல்ஸ்ட்ராட்டின் படி, தேசிய தலைநகரில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தால், யூனியன் பிரதேசத்தில் 100% வெற்றி விகிதம் என்ற ஹாட்ரிக் சாதனையை அக்கட்சி எட்டிவிடும்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், “இந்தியக் கூட்டணி 295+ இடங்களைப் பெறும். பாஜக 220 இடங்களிலும், என்.டி.ஏ கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெறும். இந்தியக் கூட்டணி தனித்து வலுவான மற்றும் நிலையான ஆட்சியை அமைக்கும். பிரதமர் யார் என்பது ஜூன் 4ம் தேதி முடிவு செய்யப்படும்” என்றார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், “இவை நரேந்திர மோடியின் கருத்துக் கணிப்புகள். பொதுமக்களிடமிருந்து கருத்துக்கணிப்பு இந்தியாவிற்கு 295 இடங்களை வழங்குகிறது, மேலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

2024 Delhi Exit poll

டெல்லி எக்ஸிட் போர் ரிசல்ட்

லோக்சபா தேர்தல் 2024 ஏழு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டம் ஏப்ரல் 17 அன்றும் கடைசியாக ஜூன் 1ம் தேதியும் நடைபெறும். 543 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும்.
ஒடிசா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ஜூன் 2ம் தேதியும், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதியும் அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க : LS Exit Poll Results 2024 LIVE: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.. ரிசல்ட் இதோ!

Latest News