5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஸ்வாதி மலிவால் மீது தாக்குதல்..கெஜ்ரிவாலின் உதவியாளர் அதிரடி கைது!

Swati Maliwal Assault case: அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இன்று நண்பகல் முதலமைச்சரின் இல்லத்திலிருந்து பிபவ் குமார் அழைத்துச் செல்லப்பட்டார். கைதான பிப்வ் குமாரை டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்வாதி மலிவால் மீது தாக்குதல்..கெஜ்ரிவாலின் உதவியாளர் அதிரடி கைது!
ஸ்வாதி மலிவால்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 May 2024 17:38 PM

கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அவரது உதவியாளரால் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்தார். கடந்த 13ஆம் தேதி டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஸ்வாதி மலிவால் டெல்லி முதல்வரின் இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார். சிறிது நேரத்தில் டெல்லி சிவில் லைன்ஸ் பகுதி காவல் நிலையத்திற்கு ஸ்வாதி மலிவால் வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : ஸ்வாதி மலிவாலுக்கு நடந்தது என்ன? வெளியான புது சிசிடிவி காட்சிகள்

இது தொடர்பாக ஸ்வாதி மலிவாலிடம் உயர் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றபோது அவரின் உதவியாளர் பிபவ் குமார் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டினார். ”தாக்குதலின்போது நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்து. உதவிக்காக பலமுறை கத்திக் கொண்டிருந்தேன். என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, நான் அவரை என் கால்களால் தள்ளிவிட்டேன். அந்த நேரத்தில், அவர் என்னை இழுத்து சென்று என் ஆடையை கிழித்தார்.

மேலும், மார்பு, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கால்களால் தாக்கினார். இதனால், தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டாக வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பான மருத்துவ அறிக்கையில் ஸ்வாதி மலிவாலை தாக்கியதில் அவரது இடது கால் மற்றும் வலது கன்னத்தில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்:

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இன்று நண்பகல் முதலமைச்சரின் இல்லத்திலிருந்து பிபவ் குமார் அழைத்துச் செல்லப்பட்டார். கைதான பிப்வ் குமாரை டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி, கெஜ்ரிவாலை சிக்க வைப்பதற்காக பாஜகவினர் செய்த சதி என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என்று சஞ்சிங் சிங் எம்.பி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று கெஜ்ரிவாலின் வீட்டில் இருந்து ஸ்வாதி மலிவாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மூன்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஸ்வாதி மலிவாலின் கைகளை பிடித்து வீட்டிற்கு வெளியே அழைத்து செல்வது போன்று சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

Also Read : ”பாஜகவின் பிளவுவாதக் கனவு பலிக்காது” முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

Latest News