Train Accident : தடம் புரண்ட பயணிகள் ரயில்.. மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்! - Tamil News | Dirbughar express met with an accident in Uttar Pradesh | TV9 Tamil

Train Accident : தடம் புரண்ட பயணிகள் ரயில்.. மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

Dibrugarh Train Accident | உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் டிப்ரூகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சண்டிகரில் இருந்து டிப்ரூகருக்கு சென்றுக்கொண்டிருந்தபோது ஜிலாஹி ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட ரயில், விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

Train Accident : தடம் புரண்ட பயணிகள் ரயில்.. மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

ரயில் விபத்து

Updated On: 

18 Jul 2024 17:56 PM

டிப்ரூகர் விரைவு ரயில் விபத்து : உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் டிப்ரூகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சண்டிகரில் இருந்து டிப்ரூகருக்கு சென்றுக்கொண்டிருந்தபோது ஜிலாஹி ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட ரயில், விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் டிப்ரூகர் விரைவு ரயிலின் ஏசி கோச்சுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பயனிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் தடம் புரண்டதும் அலறிய பயனிகள் உடனடியாக ரயிலில் இருந்து வெளியேறியுள்ளனர். அதன் பிறகு கோண்டா மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

3 பயணிகள் உயிரிழந்த நிலையில் 27 பேர் காயம்

15904 என்ற எண் கொண்ட அந்த டிப்ரூகர் விரைவு ரயில், சண்டிகர் முதல் டிப்ரூகர் வரையிலான தனது வழக்கமான பாதையில் பயணம் செய்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் கொண்ட மருத்துவ குழு மற்றும் 15 ஆம்புலன்ஸ்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டிப்ரூகர் விரைவு ரயில் விபத்தில் 4 ஏசி கோச்சுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : Influencer Died : ரீல்ஸ் மோகம்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

தொடரும் ரயில் விபத்துக்கள்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 300 பயனிகள் உயிரிழந்த நிலையில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்தனர்.

இதையும் படிங்க : Crime: நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்.. வீடியோ எடுத்த மக்கள்

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு ரயில் விபத்து நடத்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வைரல் நாயகிதான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்