விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் ஜீவனாம்சம் கோரலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! - Tamil News | | TV9 Tamil

விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் ஜீவனாம்சம் கோரலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

விவாகரத்து பெற்ற பிறகும் இஸ்லாமிய பெண் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு உரிமை உண்டு என உச்ச நிதீமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் மனைவியுடன் அவர் தேவைப்படும் போது எல்லாம் உடனிருக்க வேண்டும் என்பதை இந்திய ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி முயற்சி எடுக்கும் இந்திய ஆண்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி முகமது அப்துல் சமத் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் ஜீவனாம்சம் கோரலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

உச்ச நீதிமன்றம்

Updated On: 

10 Jul 2024 19:51 PM

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: விவாகரத்து பெற்ற பிறகும் இஸ்லாமிய பெண் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு உரிமை உண்டு என உச்ச நிதீமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தெலங்கானாவில் முகமது அப்துல் சமத் என்பவருக்கும் அவரது மனைவிகும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து பெற்றனர். இதனால், அவரது முன்னாள் மனைவி தனக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்கமாறு முன்னாள் கணவருக்கு உத்தரவிட வேண்டும் என குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன்னாள் கணவர் முகமது அப்துல் சமத் மாதந்தோறும் ரூ.20,000 வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் முகமது அப்துல் சமத் மேல்முறையீடு செய்தார். மாதத்தோறும் ரூ.10,00 ஜீவனாம்சம் அளித்தால் போதும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முகமது அப்துல் சமத் மேல்முறையீடு செய்தார்.

Also Read: பெங்களூரு டூ சென்னை.. 2 மணி நேரத்தில் போகலாம்.. இந்தாண்டு இறுதியில் இருக்கு சர்ப்ரைஸ்!

முஸ்லீம் பெண்ணுக்கு முன்னாள் கணவர் ஜீவனாம்சம் தர வேண்டும்:

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா, அகஸ்டின் ஜார்ஜ்மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 2 நீதிபதிகளும் தனித்தனியாக ஆனால் கருத்தொருமித்த தீர்ப்பை இன்று வழங்கினார். அதன்படி, குற்றவியல் சட்டம் 125-வது பிரிவு எல்லா ஒரு இஸ்லாமியப் பெண் தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவியல் சட்டம் 125 என்பது திருமணமான பெண்களுக்குதான் என்றில்லை அனைத்து பெண்களுக்கும் பொருந்தக் கூடிய பிரிவு என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும், ஜீவனாம்சம் என்பது உதவி அல்ல. திருமணமான பெண்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையானது மத எல்லைகளைத் தாண்டி திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் பாலின சமத்துவம் மற்றும் நிதிப் பாதுகாப்பு என்ற கொள்கையை வலுப்படுத்துகிறது.  பெண்கள் எதையும் எதிர்பார்க்காமல் குடும்ப நலனுக்காக நாள் முழுவதும் உழைக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் மனைவியுடன் அவர் தேவைப்படும் போது எல்லாம் உடனிருக்க வேண்டும் என்பதை இந்திய ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி முயற்சி எடுக்கும் இந்திய ஆண்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி முகமது அப்துல் சமத் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

1985ஆம் ஆண்டு ஷாபானு ஜீவனாம்சம் வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. குற்றவியல் சட்டம் 125ஆவது பிரிவு இஸ்லாமிய பெண்களுக்கும் பொருந்தும் என்பது தான் அந்த தீர்ப்பின் சாராம்சம் ஆகும். இந்த நிலையில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு 1986ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நொறுங்கிய பேருந்து.. உடல் நசுங்கி 18 பேர் உயிரிழப்பு.. உத்தர பிரதேசத்தில் சோகம்!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!