Kolkata : சிகிச்சைக்கு வந்த பெண்.. மயக்க மருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்! - Tamil News | Doctor abused woman patient by injecting Anesthesia in Kolkata | TV9 Tamil

Kolkata : சிகிச்சைக்கு வந்த பெண்.. மயக்க மருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Doctor | கொல்கத்தாவின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் ஹஸ்னாபாத் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள மருத்துவரிடம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால், அந்த பெண் மட்டும் தனியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Kolkata : சிகிச்சைக்கு வந்த பெண்.. மயக்க மருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Published: 

30 Oct 2024 20:48 PM

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில், சிகிச்சைக்கு சென்ற பெண்ணை, மருத்துவர் ஒருவர் மயக்க மருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகளும், கணடனங்களும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்த முழு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Viral Video : பிறந்தநாள் கேக்கில் எடுக்க எடுக்க வந்த 500 ரூபாய் நோட்டுகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெண் நோயாளிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் கொடுமை

கொல்கத்தாவின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் ஹஸ்னாபாத் என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள மருத்துவரிடம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால், அந்த பெண் மட்டும் தனியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இளம் பெண் தனியாக சிகிச்சைக்கு வந்திருப்பதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த மருத்துவர், அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையும் படிங்க : BiggBoss Tamil: போட்டியாளர்களிடையே ஏற்படும் பிரிவினை.. பிக்பாஸில் வெடிக்கும் பிரச்னை!

வீடியோ எடுத்து மிரட்டல்

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமன்றி, அந்த பெண்ணை மருத்துவர் மிரட்டவும் செய்துள்ளார். அதாவது, இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதை மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு, அதை வைரலாக்கி விடுவேன் என்றும் அந்த மருத்துவர் மிரட்டியுள்ளார். மேலும், ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி விடுவேன் என கூறி அந்த பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் வரை பணம் பறித்துள்ளார்.

இதையும் படிங்க : Arvind Kejriwal : “டெல்லி மாதிரியை இந்தியா முழுவதும் அமல்படுத்துங்கள்”.. பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்!

காவல் நிலையத்தில் புகார் அளித்த தம்பதி

மருத்துவரின் மிரட்டலை கேட்டு பயந்துப்போன இளம் பெண், அவர் கூறிய அனைத்தையும் செய்துள்ளார். தனது கணவர் வெளியூரில் இருந்ததால், இந்த சம்பவம் குறித்து அவர் வேறு யாரிடமும் கூறாமல் மிகவும் பயத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணின் கணவர் வெளியூரில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அப்போது அந்த இளம் பெண், நடந்த அனைத்தையும் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர், காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : Today’s Cinema News: வசூலை அள்ளும் பிரதர்..LCU வில் இணைந்த ராகவா லாரன்ஸ்.. டாப் சினிமா செய்திகள்!

மருத்துவரை கைது செய்த காவல்துறை

தம்பதியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த மோசமான செயலில் ஈடுபட்ட மருத்துவரை கைது செய்தனர். இதனை அடுத்து அந்த மருத்துவர், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிபதியிடம் பாதிக்கப்பட்ட இளம் பெண் நேரடி வாக்குமூலம் அளிப்பதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Madurai : மதுரை வெள்ள பாதிப்பு.. ரூ.11.9 கோடிக்கு புதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்!

இந்த நிலையில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணை மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் மொபைல் போனை எப்போது மாற்ற வேண்டும் - தெரிஞ்சிக்கோங்க!
ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகளா?
சர்க்கரை பதில் வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
சாப்பாட்டில் நெய் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?