Lok sabha Elections Exit Poll 2024: பாஜகவுக்கு 400 இடங்களா? எக்ஸிட் போல் குறித்து பிரசாந்த் கிஷோர் பதில்! - Tamil News | | TV9 Tamil

Lok sabha Elections Exit Poll 2024: பாஜகவுக்கு 400 இடங்களா? எக்ஸிட் போல் குறித்து பிரசாந்த் கிஷோர் பதில்!

Updated On: 

02 Jun 2024 11:31 AM

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, "அடுத்த முறை தேர்தல் வரும்போது  அரசியல் பற்றி பேசும் போலி பத்திரிக்கையாளர்கள், வாய் பேச்சு மட்டும் பேசும் அரசியல் வாதிகள், தன்னைத்தானே கூறிக்கொள்ளும் வல்லுநர்கள் தேவையற்ற விவாதங்கள் மற்றும் ஆய்வுகளைச் செய்து உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்காதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Lok sabha Elections Exit Poll 2024: பாஜகவுக்கு 400 இடங்களா? எக்ஸிட் போல் குறித்து பிரசாந்த் கிஷோர் பதில்!

பிரசாந்த் கிஷோர்

Follow Us On

பிரசாந்த் கிஷோர் பதில்: மக்களவை தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியான நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடைசி கட்ட தேர்தல் நேற்று முடிந்தது. மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து, நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் கடந்த முறையை விட அதிக இடங்களை பாஜக பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “அடுத்த முறை தேர்தல் வரும்போது  அரசியல் பற்றி பேசும் போலி பத்திரிக்கையாளர்கள், வாய் பேச்சு மட்டும் பேசும் அரசியல் வாதிகள், தன்னைத்தானே கூறிக்கொள்ளும் வல்லுநர்கள் தேவையற்ற விவாதங்கள் மற்றும் ஆய்வுகளைச் செய்து உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: சிக்கிமில் பிராந்திய கட்சி வெற்றி.. அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி!

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

டிவி 9 நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 346 இடங்கள் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ் மட்டும் 65 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கூட்டணி 167 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 36 இடங்களில் 36 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய டுடே-ஆக்சிஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 381  முதல் 401 இடங்களையும், இந்திய கூட்டணி 148 இடங்களையும், மற்ற கட்சிகள் 14 இடங்களை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏபிபி சி வோட்டர் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 368 இடங்களையும், இந்திய கூட்டணி 150 இடங்களையும், மற்ற கட்சிகள் 10 இடங்களை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜன் கி பாத்’ கருத்துக்கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 362 இடங்களையும், இந்திய கூட்டணி 141 இடங்களையும், மற்ற கட்சிகள் 10 முதல் 20 இடங்களை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஹாட்ரிக்கை நோக்கி மோடி.. கணித்து சொன்ன எக்ஸிட் போல்!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version