5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bakrid 2024: நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி உற்சாகம்!

EID Celebration 2024: இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடக்கும் சிறப்பு தொழுகையில் பங்கேற்று வருகின்றனர். இதனை அடுத்து, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

Bakrid 2024: நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்.. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி உற்சாகம்!
பக்ரீத் பண்டிகை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Jun 2024 09:29 AM

பக்ரீத் பண்டிகை: இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகத்தின் செயல் என்பதை விட பக்ரீத் என்பது அன்பின் கொண்டாட்டமாகும். இந்த நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து கறிகளை ஏழைகள், உறவினர்களுக்கு வழங்குவார்கள். அதன்படி, இன்று இஸ்லாமியர்கள் புத்தாண்டை அணிந்து தொழுகையில் கலந்து கொள்வாக்ரள். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகின்றன. மேலும், இந்த நாளில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மூன்ற சம பாகங்களாக பிரத்து ஒரு பகுதி குடும்பத்தினருக்கும், இரண்டாவது பகுதி உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதி ஏழைகளுக்கும் வழங்குவார்கள்.

அதன்படி, இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடக்கும் சிறப்பு தொழுகையில் பங்கேற்று வருகின்றனர். இதனை அடுத்து, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

சிறப்பு தொழுகை:


மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார்கள். ராஜ்தான் மாநிலம் ஜெய்பூரில் திரளான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். கேரளாவில் சந்திரசேகரன் நாயர் அரங்கில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தினார்கள்.


டெல்லியில் ஃபதேபுரி மசூதியில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். தமிழ்நாட்டில் கோவை மாவட்டதில் இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் சோன்வாரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இஸ்லாமியர்கள் பலரும் தொழுகை நடத்தினர்.  உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள முபாரக் கான் ஷஹீத் மசூதியில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார்கள்.

Latest News