5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஷிண்டே ராஜினாமா.. மகாராஷ்ராவின் அடுத்த முதல்வராகும் பட்னாவிஸ்?

Maharashtra CM : மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ஏக்னாத் ஷிண்டே ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்ரா ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். அப்போது அவருடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இருந்தார்.

ஷிண்டே ராஜினாமா.. மகாராஷ்ராவின் அடுத்த முதல்வராகும் பட்னாவிஸ்?
ஏக்நாத் ஷிண்டே (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Nov 2024 14:45 PM

மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ஏக்னாத் ஷிண்டே ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்ரா ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். மகாராஷ்ராவில் கடந்த 20ஆம் தேதி  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த  23ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில், ஆளும் பாஜக கூட்டணி 235 இடங்களில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் பாஜக 132 இங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.  மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றாலும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.

ஏக்னாத் ஷிண்டே ராஜினாமா

உத்தவ் தலைமையிலான ஒன்றுபட்ட சிவசேனாவை பிளவுபடுத்தியதால் பாஜக கூட்டணி அரசில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல, தேசியவாத காங்கிரஸை பிளவுப்படுத்தி அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. பாஜக சார்பில் பட்னாவிஸ் துணை முதல்வராக இருந்தார்.

ஆனால், தற்போது நடந்த முடிந்த தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றியை பெற்று இருப்பதால் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஆனால், முதல்வர் பதவியை பீகார் மாடல் அடிப்படையில் மீண்டும் தங்களுக்கு தர வலியுறுத்தி ஏக்நாத் ஷிண்டே நெருக்கடி கொடுத்து வந்தார்.

அதே நேரத்தில் தனிப்பெருங்கட்சியாக வென்றுள்ள பாஜக, முதல்வர் பதவி தன்வசம் வைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதனால் மகாராஷ்ராவில் அடுத்த முதல்வர் யார் என்பதை இறுதி செய்வதில் நீடித்து கொண்டே இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்களாகியும் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்று ஷிண்டே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தி வருவதால், அங்கு புதிய ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிராவின் சட்டப்பேரவையின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.

Also Read : மகாராஷ்டிரா தோல்விக்கு மின்னணு இயந்திரம் காரணமா? கார்த்தி சிதம்பரம் பதில்

மகாராஷ்ராவின் அடுத்த முதல்வராகும் பட்னாவிஸ்?

எனவே, இன்று நள்ளிரவு 12 மணிக்குள் புதிய அரசை அமைக்க வேண்டிய சூழல் பாஜக கூட்டணிக்கு உருவாகி உள்ளது. இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை சட்டப்பேரவை அதிகாரி மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மகாராஷ்டிராவில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் புதிதிக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பெயர்கள் அடங்கிய நகலை சமர்ப்பித்துவிட்டதால் 15வது சட்டப்பேரவை தற்போது நடைமுறையில் உள்ளதாக கருதப்படும்.

Also Read : நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 73வது பிரிவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பை சமர்ப்பித்த பிறகு, அவை முறையாக அமைக்கப்பட்டதாக கருதப்படும்” என்றார். இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ஏக்னாத் ஷிண்டே ராஜினாமா செய்துள்ளார்.


மகாராஷ்ரா ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் ஷிண்டே. அப்போது அவருடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இருந்தார். இதற்கிடையில், தேவேந்திர பட்னாவிஸ் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது.

இதனால் பட்னாவிஸ் முதல்வர் பதவி வகிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், சிவசேனா கட்சியினர் ஷிண்டே தான் முதல்வாராக வேண்டும் என்றும், பாஜகவினர் பட்னாவிஸ் தான் முதல்வராக வேண்டும் என்று மாறி மாறி கூறி வருகின்றனர். இதனால் மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவுகிறது.

Latest News