EVMஐ ஹேக் செய்ய முடியுமா? கொளுத்தி போட்ட எலான் மஸ்க்.. மல்லுக்கட்டும் மாஜி அமைச்சர்! - Tamil News | | TV9 Tamil

EVMஐ ஹேக் செய்ய முடியுமா? கொளுத்தி போட்ட எலான் மஸ்க்.. மல்லுக்கட்டும் மாஜி அமைச்சர்!

Published: 

16 Jun 2024 15:49 PM

இந்தியாவில் இவிஎம் எனும் மின்னணு இயந்திரங்கள் மூலம் தான் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நன்பகத்தன்மை குறித்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இந்த நிலையில், உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கருத்து தெரிவித்தது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதன்படி, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்துகள் மிக அதிகமாகவே உள்ளது" என்றார்.

EVMஐ ஹேக் செய்ய முடியுமா? கொளுத்தி  போட்ட எலான் மஸ்க்.. மல்லுக்கட்டும் மாஜி அமைச்சர்!

எலான் மஸ்க்

Follow Us On

EVMஐ ஹேக் செய்ய முடியுமா? இந்தியாவில் இவிஎம் எனும் மின்னணு இயந்திரங்கள் மூலம் தான் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நன்பகத்தன்மை குறித்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இந்த நிலையில், உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கருத்து தெரிவித்தது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் முதன்மை தேர்தலில் ஏற்பட்ட வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து சுயேச்சை அதிபர் வேட்பாளரான ராபர்ட் கென்னடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “டோ ரிக்கோவில் நடந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான முறைகேடு கண்டறியப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக ஆவணங்கள் இருந்ததால் பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஒருவேளை ஆவணங்கள் இல்லையென்றால் நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு பதலளித்துள்ள எலான் மஸ்க், இந்தியாவில் இவிஎம் எனும் மின்னணு இயந்திரங்கள் மூலம் தான் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நன்பகத்தன்மை குறித்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இந்த நிலையில், உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கருத்து தெரிவித்தது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதன்படி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்துகள் மிக அதிகமாகவே உள்ளது” என்றார். எலான் மஸ்க்கின் இந்த பதிவு மின்னணு வாக்குப்பதிவு குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

மஸ்கின் கருத்திற்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “மின்னணு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது. எலான் மஸ்க் கூறியதில் உண்மை இல்லை. அவர்கள் இந்தியாவிற்கு வந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவரது கருத்துப்படி அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்பு இருக்கலாம். அங்கு இணையத்துடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், இந்தியாவில் உள்ள இவிஎம் மெஷின்கள் மிகவும் பாதுகாப்பாவை. இணையம், ப்ளூடூத், வைஃபை வசதிகளில் இருந்து தனிப்படுத்தப்பட்டவை” என தெரிவித்திருந்தார். இதற்கு பதலளித்த எலான் மஸ்க், ”ஹேக் செய்யலாம்” என்றார். இதற்கு ராஜீவ் சந்திரசேகர், “தொழில்நுட்ப ரீதியாக உங்கள் வாதம் சரியானது. ஆனால், இவிஎம் இயந்திரங்கள் மிகவும் நம்பகத்தன்மையானவை, பாதுகாப்பனவை. வாக்குச்சீட்டு முறையில் இருந்து முற்றிலும் வேறுப்பட்டது” என்றார்.

எலான் மஸ்க்கின் கருத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “இந்தியாவில் இவிஎம் என்பது கருப்பு பெட்டியாகும். வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்ய யாருக்கும் அனுமதி தருவது இல்லை.   தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை தொடர்பாக பல கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். இதனால் ஜனநாயக சீர்குலைந்துவிடும்” என்றார்.

Also Read: மீண்டும் அதிகரிக்கப்போகும் வெப்பம்.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version