5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“ஆபிஸ் வரலைன்னா வேலையை விட்டு போயிடுங்க” ஊழியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமேசான்!

Amazon: ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யவில்லை வரவில்லை என்றால் பணியில் இருந்து வெளியேறுங்கள் என்று அமேசான் சிஇஓ தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனவரி மாதத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தில் வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

“ஆபிஸ் வரலைன்னா வேலையை விட்டு போயிடுங்க” ஊழியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமேசான்!
அமேசான்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Oct 2024 18:00 PM

உலகின் பிரபலமான நிறுவனமான அமேசான், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தில் வந்து பணிபுரிய வேண்டும் என்று கடந்த வாரம் அமேசான் தலைமை செயல் அதிகாரி புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இது அமேசான் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்ந்தமான ஒரு சர்வேயும் நடத்தியது. அதில், கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் வேலையை விட்டு விடுவோம் என்று 70 சதவீத ஊழியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இப்படியான சூழலில் தான், ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யவில்லை வரவில்லை என்றால் பணியில் இருந்து வெளியேறுங்கள் என்று அமேசான் சிஇஓ தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு கண்டிஷன் போட்ட அமேசான்

அமெரிக்காவை தளமாக கொண்டு அமேசான் நிறுவனம் இயங்கி வருகிறது. உலகளவில் பல நாடுகளில் அமேசான் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அமேசான் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு கொரோனா காலக்கட்டத்தில் இருந்து வீட்டில் இருந்து வேலை செய்து வந்தனர். இப்படியான சூழலில், சமீபத்தில் அமேசான் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ஜனவரி மாதம் முதல் ஐந்து நாட்கள் கட்டாயம் அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது.

Also Read: இனி பக்கா நெட்வொர்க்… பிஎஸ்என்எல் சொன்ன குட்நியூஸ்.. என்ன தெரியுமா?

இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இப்படியான சூழலில்,  அலுவலகத்தில் இருந்து வேலை செய்யவில்லை என்றால் பணியில் இருந்து வெளியேறுங்கள் என்று அமேசான் சிஇஓ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

“ஆபிஸ் வரலைன்னா வேலையை விட்டு போயிடுங்க”

இதுகுறித்து அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி மாட் கார்மன் கூறுகையில், “அலுவலகத்தில் வேலை செய்ய விரும்பதவர்கள் வேலையில் இருந்து வெளியேறலாம். அலுவலகத்தில் ஊழியர்கள் வேலை செய்வது எங்கள் ஒத்துழைப்பாக இருக்கும். ஊழியர்கள் அலுவலகத்தில் வராமல் வேலை செய்வது எங்களது புதிய தயாரிப்புகளை உருவாக்குவது கடினமாக உள்ளது.

இந்த புதிய விதிமுறைகளில் சில ஊழியர்களுக்கு உடன்பாடில்லை. அவர்கள் பயணம் செய்வது நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்று கூறுகின்றனர். கொரோன காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தினோம். அதையே தற்போது ஊழியர்கள் விரும்புகின்றனர்.

Also Read: கோடிகளில் சம்பளம்.. சாப்பாடு டோக்கனில் ஏமாற்று வேலை.. பணி நீக்கம் செய்த மெட்டா!

ஆனால் இந்த எங்களின் புதிய தயாரிப்பிற்கு ஊழியர்கள் கட்டாயம் 5 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வது கட்டாயம். அப்படி வேலை செய்ய விரும்பாதவர்கள் பணியில் இருந்து வெளியேறுவது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

Latest News