Tirupati Laddoo : திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. வலுக்கும் கண்டனம்.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி!

Jagan Mohan Reddy | திருப்படி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tirupati Laddoo : திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. வலுக்கும் கண்டனம்.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி!

ஜெகன் மோகன் ரெட்டி

Published: 

20 Sep 2024 13:35 PM

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

இதையும் படிங்க : TVK Conference : அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய்

திருப்படி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு இருந்தபோது, புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஆய்வகத்தின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.மேலும், லட்டில் கலக்கப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்.. இன்று முதல் இந்தியாவில் விற்பனை தொடக்கம்!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்ப்பட்டதை அறிந்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு பிரபலங்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனை

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் மிகுந்த வேதனை அளித்துள்ளதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த வகையிலும் சனாதன தர்மம் அவமதிக்கப்படுவதை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த விவகாரத்துக்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதி அளித்துள்ள அவர், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற பிரச்னைகளை ஆய்வு செய்ய தேசிய அளவில் சனாதன தர்ம ரக்‌ஷணா வாரியம் அமைப்பதற்கான நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Happy Birthday Rashid Khan: அகதிகள் முகாமில் கிரிக்கெட்.. 17 வயதில் அறிமுகம்.. போரில் முளைத்த ரஷித் கானின் போராட்ட வாழ்க்கை!

மகா பாவம் – முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு , திருப்பதியில் மாமிசக் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி பிரசாதம் செய்து மகா பாவம் செய்துவிட்டார்கள். பிரசாதத்தின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என்று பலமுறை தேவஸ்தன நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்திக்கும் ஜெகன் மோகன் ரெட்டி

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் இந்த முறைகேடு நடந்துள்ள நிலையில், அது குறித்து அவர் விளக்கமளிக்க உள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாவும் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!