5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Exit Poll Result 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சரியாக இருக்குமா? கடந்த கால வரலாறு சொல்வது இதுதான்!

Exit Poll Results 2024: 2024 மக்களவை தேர்தலில் களத்தில் இருக்கும் 8,360 வேட்பாளர்களின் விதியை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். தேர்தல் முடிந்த அடுத்த அரை மணி நேரத்திலேயே தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும். அதில், அடுத்த 5 ஆண்டுகள் யார் நாட்டை ஆளுப்போவது என்பது கிட்டதட்ட தெரிந்தவிடும். இருப்பினும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.

Exit Poll Result 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சரியாக இருக்குமா? கடந்த கால  வரலாறு சொல்வது இதுதான்!
கருத்துக் கணிப்பு முடிவுகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Jun 2024 15:20 PM

கருத்துக் கணிப்புகள்: கடந்த 2 மாதங்களான மக்களவை தேர்தல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் இன்று அதாவது ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் களத்தில் இருக்கும் 8,360 வேட்பாளர்களின் விதியை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். தேர்தல் முடிந்த அடுத்த அரை மணி நேரத்திலேயே தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும். அதில், அடுத்த 5 ஆண்டுகள் யார் நாட்டை ஆளுப்போவது என்பது கிட்டதட்ட தெரிந்தவிடும். இருப்பினும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். இருந்தாலும், இந்த கருத்துக்கணிப்புகள் வேட்பாளர்களுக்கு பலரும் சந்தோஷத்தையும் கொடுத்தாலும், சிலருக்கு மனக்கசப்பில் கொண்டு செல்லும்.

2019 மற்றும் 2014 கருத்துக் கணிப்புகள்:

இந்த சமயத்தில் கடந்த இரண்டு தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்புகளை அலசி பார்ப்போம். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 93 தொகுதிகளை பெறும் என இந்திய டூடே ஆக்சிஸ் கணித்திருந்தது. அதேபோல, Times Now-VMR கருத்துக்கணிப்பின் படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 306 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 132 தொகுதிகளை பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. மேலும், ஏபிபி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 277 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 130 தொகுதிகளை பெறும் கணிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 148 தொகுதிகளை பெறும் என India today-Cicero கணித்துள்ளது. Timesnow-ORG கருத்துக் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 249 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 148 தொகுதிகளை பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. மேலும், CNN IBN-CSDS வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 276 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 103 தொகுதிகளை பெறும் என கணிக்கப்பட்டிருந்தது. 2009 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 195 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 189 தொகுதிகளை பெறும் என India today-CVoter கணித்திருந்தது.

2014, 2019ல் மோடி அலை:

கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி, 2019 தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 22 கோடியே 90 லட்சத்து 76 ஆயிரத்து 879 (37.36%) வாக்குகள் பெற்று 303 இடங்களில் தனது வெற்றியை பதிவு செய்தது. 303 இடங்களில் வென்றது மட்டுமில்லாமல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றது.அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 52 இடங்கள் பெற்று தோல்வி அடைந்தது. 2014 தேர்தலில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. வரலாற்றில் இல்லாத வகையில் வெறும் 44 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பு துலியமாக இருக்குமா? முரணாக இருக்குமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Latest News