5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Exit Polls 2024: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு ஷாக்.. திரும்பி அடிக்கும் காங்கிரஸ்.. Exit poll சொல்வது என்ன?

கருத்துக்கணிப்புகள்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்ப முடிவுகளில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Exit Polls 2024: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு ஷாக்.. திரும்பி அடிக்கும் காங்கிரஸ்.. Exit poll சொல்வது என்ன?
ராகுல் காந்தி – மோடி (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Oct 2024 21:45 PM

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடந்துள்ளது. அதாவது மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை, இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு பிறகு நடக்கு முதல் தேர்தல். இதனால் ஜம்மு காஷ்மீர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது. ஜம்மு காஷ்மீரில் மூன்று முனைப்போட்டி நிலவுகிறது.

முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கசி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, பாஜக, காங்கிரஸ் என மூன்று முனைப்போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீர் கருத்துக் கணிப்பு:

அதில் காங்கிரஸ் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. டைனிக் பாஸ்கர் ரிப்போர்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் 35 முதல் 40 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பாஜக 20 முதல் 25 இடங்களையும், பிடிபி 4 முதல் 7 இடங்களையும், மற்ற கட்சி 12 முதல் 18 இடங்களை கைப்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே – சி-வோட்டர் தரவுகளின்படி, காங்கிரஸ் கூட்டணி 40-48 இடங்களைப் பெறலாம் என்றும் பாஜக 32 இடங்களை பெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: “மனைவியுடன் கட்டாய உறவு குற்றமல்ல” உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

மேலும், பிடிபி 7 முதல் 11 இடங்களை கைப்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. people pulse கருத்துக்கணிப்பின் படி, பாஜக 23 முதல் 27 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 46 முதல் 50 இடங்களிலும், பிடிபி 4 முதல் 7 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. Axis of India கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கூட்டணி 35 முதல் 45 இடங்களையும், பாஜக 24 முதல் 24 இடங்களையும், பிடிபி 4 முதல் 6 இடங்களையும் கைப்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஹரியானா கருத்துக் கணிப்பு:

ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பாஸ்கர் கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, காங்கிரஸ் 44 முதல் 54 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜக 15 முதல் 29 இடங்களையும், ஜனநாயக ஜனதா கட்சி ஒரு இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி 1 முதல் 5 இடங்களையும் கைப்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், டைனிக் பாஸ்கர் ரிப்போர்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி 44 முதல் 54 இடங்களையும், பாஜக 14 முதல் 29 இடங்களையும், ஜனநாயக ஜனதா கட்சி ஒரு இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி 1 முதல் 5 இடங்களையும் கைப்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.  people pulse கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜக 20 முதல் 32 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 49 முதல் 61 இடங்களையும், ஜனநாயக ஜனதா கட்சி 3 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி 2 முதல் 3 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Dhruv Research கருத்துக் கணிப்பு முடிவின் படி, பாஜக 22 முதல் 32 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 50 முதல் 64 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜனநாயக ஜனதா கட்சி,இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹரியானாவில் ஆட்சி அமைக்கலாம் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்.. மம்தாவுக்கு மீண்டும் நெருக்கடி!

கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. இதனால், இந்த முறையும் ஹாட்ரிக் வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், மறுபுறம் காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு இழுந்த செல்வாக்கை மீட்க கடும் முயற்சிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News