5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lok sabha Elections Exit Poll 2024 : ஹாட்ரிக்கை நோக்கி மோடி.. கணித்து சொன்ன எக்ஸிட் போல்!

Lok sabha Elections Exit Poll 2024 : கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 1ஆம் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் பாஜக எத்தனை இடங்களில் வெல்லம் போன்றவைகள் வெளியாகி உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 346 இடங்கள் வெல்லும் என்று டிவி 9 நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்திய கூட்டணி 167 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Lok sabha Elections Exit Poll 2024 : ஹாட்ரிக்கை நோக்கி மோடி.. கணித்து சொன்ன எக்ஸிட் போல்!
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Jun 2024 08:54 AM

மீண்டும் மோடி அலை: கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 1ஆம் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் பாஜக எத்தனை இடங்களில் வெல்லம் போன்றவைகள் வெளியாகி உள்ளன. TV9 Bharatvarsh, POLSTRAT மற்றும் PEOPLE’S INSIGHT ஆகியவை நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 346 இடங்கள் வெல்லும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ் மட்டும் 65 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கூட்டணி 167 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 36 இடங்களில் 36 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய டுடே-ஆக்சிஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 381 இடங்களையும், இந்திய கூட்டணி 148 இடங்களையும், மற்ற கட்சிகள் 14 இடங்களை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏபிபி சி வோட்டர் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 368 இடங்களையும், இந்திய கூட்டணி 150 இடங்களையும், மற்ற கட்சிகள் 10 இடங்களை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜன் கி பாத்’ கருத்துக்கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 362 இடங்களையும், இந்திய கூட்டணி 141 இடங்களையும், மற்ற கட்சிகள் 10 முதல் 20 இடங்களை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2014 தேர்தலில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. வரலாற்றில் இல்லாத வகையில் வெறும் 44 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வென்று அமோ வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஏறக்குறைய 23 கோடி பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். 38 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 55 சதவித இடங்களை தன்வசத்திற்கு கொண்டு வந்தது.

Also Read: தமிழ்நாட்டில் சிக்ஸர் அடித்த இந்தியா கூட்டணி? அதிமுகவை பின்னுக்கு தள்ளியதா பாஜக?

 

Latest News