Exit Poll Result 2024 Date Tamil: அரியணை யாருக்கு? மாலை 6 மணிக்கு வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்! - Tamil News | | TV9 Tamil

Exit Poll Result 2024 Date Tamil: அரியணை யாருக்கு? மாலை 6 மணிக்கு வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Exit Poll Result 2024 Date, Time News in Tamil: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. 2024 மக்களவை தேர்தலில் களத்தில் இருக்கும் 8,360 வேட்பாளர்களின் விதியை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். இறுதிக்கட்ட தேர்தல் முடிவுக்கு வரும் நேரத்தில், வெற்றி, தோல்வி ஏற்கனவே கணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

Exit Poll Result 2024 Date Tamil: அரியணை யாருக்கு? மாலை 6 மணிக்கு வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

கருத்துக்கணிப்பு முடிவுகள்

Updated On: 

01 Jun 2024 09:52 AM

கருத்துக்கணிப்பு முடிவுகள்: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்று எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே அறிவிக்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலில் களத்தில் இருக்கும் 8,360 வேட்பாளர்களின் விதியை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். இறுதிக்கட்ட தேர்தல் முடிவுக்கு வரும் நேரத்தில், வெற்றி, தோல்வி ஏற்கனவே கணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. நாட்டில் உள்ள பல்வேறு ஏஜென்சிகள் கருத்துகணிப்புள வெளியிடும். இந்தக் கருத்துக் கணிப்புகள் மூலம் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும் என மதிப்பிடப்படும்.

Also Read: இன்று கூடுகிறது I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம்.. டெல்லியில் ஒன்றுகூடும் தலைவர்கள்!

கருத்துக்கணிப்பு என்றால் என்ன?

எக்ஸிட் போல் என்பது ஒரு வகையான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும், இது வாக்காளர்களின் பதில்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. வாக்களிக்கும் நாளில், செய்தி சேனல்கள் மற்றும் எக்ஸிட் போல்களை நடத்தும் ஏஜென்சிகளின் பிரதிநிதிகள் வாக்குச்சாவடிகளில் இருப்பர். இந்த பிரதிநிதிகள் அவர்களிடம் சில கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை பெறுகிறார்கள். அவர்களின் பதில்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, வாக்காளர்கள் யார் பக்கம் என்பதை கணக்கிடுகின்றனர். இந்த கணக்கெடுப்பில் வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பவர், இதனால் மதிப்பீடுகள் முடிந்தவரை ரிசல்ட் முடிவுகளுக்கு அருகில் இருக்கும்.

சட்டம் என்ன சொல்கிறது?

கருத்துக் கணிப்புகள் எப்போது வெளியிடப்படும், எப்போது வெளியிடப்படாது என்பது குறித்து சட்டமும் வழிகாட்டுதல்களும் உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் முடியும் வரை கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியாது என்று கூறுகிறது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் 1998-ம் ஆண்டு முதல் முறையாக வெளியிட்டது. இருப்பினும், இதற்குப் பிறகும், கருத்துக் கணிப்புகள் மற்றும் கருத்துக் கணிப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெவ்வேறு நேரங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதியை ஏதேனும் செய்தி சேனல் அல்லது சர்வே ஏஜென்சி பின்பற்றவில்லை என்றால் அல்லது மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று விதி கூறுகிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் துல்லியமாக இருக்குமா?

எக்ஸிட் போல்கள் தேர்தல் முடிவுகள் என்பது ஒரு கணிப்பு மட்டுமே. இவை துல்லியமாக இருக்குமா இல்லையா என்பதை முடிவுகளுக்கு முன் தெளிவுபடுத்த முடியாது. பல முறை இந்த கணிப்புகள் துல்லியமானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன, ஆனால் சில நேரங்களில் அவை முடிவுகளுக்கு முரணாகவும் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Lok Sabha Election 2024 News LIVE: 57 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?