Exit polls: ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றம்? மராட்டியத்தில் யார் ஆட்சி?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநில தேர்தல் முடிவுகள் நவம்பர் 23ம் தேதி அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

Exit polls: ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றம்? மராட்டியத்தில் யார் ஆட்சி?

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

Updated On: 

20 Nov 2024 19:14 PM

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை பல சேனல்கள் மற்றும் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் விரைவில் வெளியிட உள்ளன. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், ஜார்கண்டில், ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற பாஜக தலைமையிலான என்டிஏ முயற்சி செய்து வருகிறது. இரு மாநில தேர்தல் முடிவுகள் நவம்பர் 23ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

வாக்குப் பதிவு

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டில் நவம்பர் 20 (புதன்கிழமை) சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இருப்பினும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று (நவ.20, 2024) வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மகாராஷ்டிராவில் 1,16,355 சேவை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 9,64,85,765 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க : Maharashtra Assembly Election: மகாராஷ்ட்ராவை ஆள்வது யார்? – சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு!

மற்ற மாநில இடைத்தேர்தல்கள்

இந்த இரண்டு மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலுடன், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன, ஆங்காங்கே வன்முறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் மற்றும் அரசாங்க இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவர் குற்றச்சாட்டு கூறிய போலீஸ்காரரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தலில் முறைகேடுகள் நடத்துள்ளன என்றும் குற்றஞ்சாட்டினார். அகிலேஷின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.

ஜார்க்கண்ட் 2019 சட்டமன்ற தேர்தல்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) வெற்றி பெற்றது. ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் 30 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கருத்துக் கணிப்புகள் ஜேஎம்எம்-காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ-க்கு வெற்றி கிடைக்கும் என அறிவித்தன.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 2019 இல், பாஜக 105 இடங்களிலும், பிரிக்கப்படாத சிவசேனா 56 இடங்களிலும், பிரிக்கப்படாத என்சிபி 54 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. எக்ஸிட் போல் கணிப்புகளை விட சிறப்பாக செயல்பட்டது நினைவு கூரத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கணட் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.

மாட்ரிக்ஸ் கருத்துக் கணிப்பு

மாட்ரிக்ஸ் கருத்துக் கணிப்பில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றம்?

அதன்படி, ஜார்க்கண்டில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 42-47 தொகுதிகளில் வெல்லும் எனவும் ஜே.எம்.எம் காங்கிரஸ் கூட்டணிக்கு 25-30 தொகுதிகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 150-170 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110-130 தொகுதிகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 8-10 இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம் மீதான விசாரைணக்கு தடை.. டெல்லி உயர் நீதிமன்றம்

ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் விவரம்..!
அபர்ணா பாலமுரளியின் அழகிய போட்டோஸ் இதோ
புடவையில் கலக்கும் ராஷ்மிகா மந்தனா!
இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!