5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: உயிரிழந்த நோயாளியின் கண் மாயம்.. கூலாக பதில் சொன்ன மருத்துவமனை!

Bihar: மருத்துவமனை நிர்வாகத்திடம் ஃபண்டஸ் குமார் உறவினர்கள் கண் தொடர்பாக கேள்வியெழுப்பினர். மருத்துவர்களே கண்ணை தோண்டி எடுத்ததாக குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 

Crime: உயிரிழந்த நோயாளியின் கண் மாயம்.. கூலாக பதில் சொன்ன மருத்துவமனை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 17 Nov 2024 15:46 PM

பீகார்: பீகார் மாநிலத்தில் மருத்துவமனையில் இறந்த நோயாளியின் கண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இறந்தவரின் உறவினர்கள் கேள்வியெழுப்பியபோது மருத்துவமனை அலட்சியமாக பதிலளித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர் ஃபண்டஸ் குமார் என்பவர் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் அங்குள்ள நாளந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் 15 ஆம் தேதி இரவு 8.55 மணியளவில் ஃபண்டஸ் குமார் உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தியைக் கேட்ட குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி வரை ஃபண்டஸ் குமார் உடலுடன் இருந்த குடும்பத்தினர் காலையில் தான் பிரதபரிசோதனை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டதால் வீட்டுக்குச் சென்று அவரின் இறுதிச்சடங்குக்கான பணிகளை மேற்கொள்ளச்  சென்றனர்.  தொடர்ந்து நேற்று காலை ஃபண்டஸ் குமார் உடலை வாங்கச் சென்ற குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

Also Read: விசாரணை வளையத்திற்குள் கஸ்தூரி.. 14 நாட்கள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காரணம் அவரின் இடது கண்  காணாமல் போயிருந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஃபண்டஸ் குமார் உறவினர்கள் கண் தொடர்பாக கேள்வியெழுப்பினர். மருத்துவர்களே கண்ணை தோண்டி எடுத்ததாக குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஃபண்டஸ் குமார் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.மேலும் ஊடகத்தினரிடம் பேசிய ஃபண்டஸ் குமார் உறவினர்கள், “மருத்துவமனை நிர்வாகம் எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியும் என தெரியவில்லை. உயிரிழந்த நபரின் கண்ணை மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதுபோன்ற செயலை ஏற்கவே முடியவில்லை. இதன் பின்னால் உள்ள உண்மையை போலீசார் கண்டறிய வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஃபண்டஸ் குமார் உடலில் இருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தோட்டா அகற்றப்பட்டது. ஆனாலும் வெள்ளிக்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் உயிரிழந்தார். நள்ளிரவு 1 மணி வரை அவரது உடல் அருகே குடும்பத்தினர் இருந்த நிலையில் அதிகாலை 5  மணிக்கு கண்ணை காணவில்லை என தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். போலீஸிலும் மருத்துவமனை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read:Viral Video : மருத்துவமனையில் “Party” கொண்டாடிய மருத்துவர்கள்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ இணையத்தில் வைரல்!

ஒருவேளை கண்களை எலிகள் கடித்து குதறினவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் தான் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியும். கவன குறைவாக இந்த சம்பவம் நடந்ததா, அதே நேரத்தில் யாராவது தவறு செய்து இருந்தாலும் சரி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேறு ஒருவருக்கு கண்ணை பொருத்த ஃபண்டஸ் குமார் கண்ணை எடுத்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இரவு 9 மணி அளவில் இறந்த நோயாளியின் கண்ணானது  இரவு 1 மணிக்கு பிறகு தான் மாயமாகி உள்ளது. கண் தானம் செய்ய வேண்டும் என்றால் நோயாளியின் உடலில் இருந்து அவர் இறந்த 4 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்து கண்களை அகற்ற வேண்டும் என்பதால் இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகுஜன மக்களும் அனைத்து விதமான உடல்நல பாதிப்புகளுக்கும் சிகிச்சைப் பெற அரசு மருத்துவமனைகளுக்கு தான் நாடி வருகின்றனர். ஆனால் அத்தகைய மருத்துவமனைகள் தரம் மோசமாக உள்ளதாக பல்வேறு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கிறது. என்னதான் உயர்மட்ட வசதிகள் செய்தாலும் அதெல்லாம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளி முதல் இறந்த நோயாளி வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

Latest News