ColdPlay : சில நிமிடங்களில் விற்று தீர்ந்த கோல்டு பிளே டிக்கெட்.. ரசிகர்கள் ஏமாற்றம்! - Tamil News | Fans got disappointed after ColdPlay music show tickets sold within few minutes | TV9 Tamil

ColdPlay : சில நிமிடங்களில் விற்று தீர்ந்த கோல்டு பிளே டிக்கெட்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

Updated On: 

23 Sep 2024 22:14 PM

Ticket Sold | கோல்டு பிளே இசைக்குழு வரும் ஜனவரி 18, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மும்பையில் இசைக் கச்சேரி நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை காண இதுவரை சுமார் 13 மில்லியன் மக்கள் டிக்கெட் புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் டிக்கெட் கிடைக்காதததால் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ColdPlay : சில நிமிடங்களில் விற்று தீர்ந்த கோல்டு பிளே டிக்கெட்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

இந்தியாவில் நடைபெற உள்ள பிரபல இசைக்குழு கோல்டு பிளேவின் (ColdPlay) இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், கோல்டு பிளே இசைக்குழு மீண்டும் இந்தியாவில் இசைக் கச்சேரி நடத்த உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கோல்டு பிளே இசைக்குழு யாருடையது, இந்த குழு மக்கள் மத்தியில் ஏன் இவ்வளவு பிரபலமாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!

இந்தியாவில் மீண்டும் ஒரு கோல்டு பிளே கான்சர்ட்? – இணையத்தில் உலா வரும் தகவல்

இது குறித்து வெளியான தகவலின் படி, வரும் ஜனவரி 25 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் க்ரிஸ் மார்டின் இசைக் கச்சேரி நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதறிப்போன பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?

கோல்டு பிளே கான்சர்டால் உயரும் ஹோட்டல் கட்டணம்?

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நபர் ஒருவர் கோல்டு பிளே இசைக் கச்சேரி குறித்து வெளிவரும் தகவல்கள் உணமைதான் போலிருக்கிறது. இதன் காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல்களில் இப்போதே கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கில் மறு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள்

கோல்டு பிளே இசைக்குழு வரும் ஜனவரி 18, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மும்பையில் இசைக் கச்சேரி நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை காண இதுவரை சுமார் 13 மில்லியன் மக்கள் டிக்கெட் புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் டிக்கெட் கிடைக்காதததால் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி டிக்கெட்டுகளை வாங்கி சிலர் அதிக விலைக்கும் விற்பனை செய்துள்ளானர். ரூ.4,000 ஆன டிக்கெட்டை வாங்கிய நபர் அதை சுமார் ரூ.77,000-க்கு விற்பனை செய்துள்ளார். இதேபோல ரூ.12,500-க்கு வாங்கிய டிக்கெட்டை மற்றொரு நபர் சுமார் ரூ.1.21 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். மேலும் ரூ.35,000 மதிப்பிலான டிக்கெட்டை மற்றொரு நபர் ரூ.1.01 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND VS BAN 2nd Test: கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த பிசிசிஐ.. மீண்டும் மிரட்டுமா ரோஹித் படை..?

கோல்டு பிளே இசைக்குழு உருவானது எப்படி?

கோல்டு பிளே என்பது லண்டனை மையமாக கொண்ட ஒரு ராப் இசைக்குழு ஆகும். இது கடந்த 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த இழைக்குழுவில் பாடகர் கிறிஸ் மார்டின், ஜானி பக்லேண்ட், பாஸிஸ்ட் கெய் பெர்ரிமேன் உள்ளிட்ட கலைஞர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்த இசைக்குழுவுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு..
Mpox: அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்..
UNSC Counsil: இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்குமா? பிரட்டன் எடுத்த முடிவு!
PM Modi CM Stalin Meet: 30 நிமிடம்.. பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன பேசுனாங்க தெரியுமா?
Uttarpradesh: திருப்பதி லட்டு சர்ச்சை.. உ.பி., கோயில்களில் பிரசாதங்களுக்கு கடும் கட்டுப்பாடு..!
Uttarpradesh Crime News: ”பள்ளிக்கு புகழ் கிடைக்கணும்” 2ம் வகுப்பு மாணவன் நரபலி.. ஆசிரியர்கள் செய்த கொடூரம்!
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version