5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பெண் போலீஸ் ஆணவக் கொலை.. நடந்தது என்ன? பகீர் சம்பவம்!

Telangana constable honour killing: தெலங்கானாவில் பெண் போலீஸ் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பெண் போலீஸின் சகோதரன் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

பெண் போலீஸ் ஆணவக் கொலை.. நடந்தது என்ன? பகீர் சம்பவம்!
தெலங்கானாவில் பெண் போலீஸ் ஆணவக் கொலை
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 02 Dec 2024 17:21 PM

தெலங்கானாவில் பெண் போலீஸ் ஆணவக் கொலை: தெலங்கானாவில் பெண் போலீஸ் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் கவுரவக் கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் அந்த பெண்ணுக்கும் அவரது சகோதரருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதல் திருமணம்- எதிர்ப்பு

மேலும், இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகரில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினம் அருகே திங்கள்கிழமை (டிச.2, 2024) காலை நடந்துள்ளது.
கான்ஸ்டபிள் எஸ்.நாகமணி, கடந்த நவம்பர் 21ம் தேதி, யாதகிரிகுட்டாவில், வேறு சாதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். காவல்துறையின் கூற்றுப்படி, நாகமணியின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : Telangana: தெலுங்கானா எல்லையில் பதட்டம்.. என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் உயிரிழப்பு!

ஆணவக் கொலை?

மேலும் அவரது சகோதரர் பரமேஷ் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை நாகமணி சென்ற பைக்-ஐ காரில் வந்து மோதியுள்ளார் பரமேஷ்.
தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கோடரியால் அவரை வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பரமேஷ் போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. அதிகாலையில் பெண் போலீஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க: “பேய் பிடிச்சிருக்கு” பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை.. கம்பியால் சூடுவைத்த கொடூரம்!

Latest News