5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024: 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.. என்ன எதிர்ப்பார்க்கலாம்?

தற்போது, ​​ஜூன் 24-ம் தேதி தொடங்கிய 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு ஜூலை 1 ஆம் தேதி முடிவடையும் மற்றும் ஏற்கனவே புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா மற்றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் கூட்டுக் கூட்டத்தை ஜூன் 27 அன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த மாதம் இறுதியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

Budget 2024: 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.. என்ன எதிர்ப்பார்க்கலாம்?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 01 Jul 2024 18:49 PM

யூனியன் பட்ஜெட்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை கடந்த பிப்ரவரியில் சமன் செய்த நிர்மலா சீதாராமன், இப்போது புதிய சாதனை படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு பட்ஜெட்டில் வருமான வரி வலிக்கு உச்ச வரம்பு, ஜிஎஸ்டி திருத்தங்கள், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதுவும் ரூ.10 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான வரி விதிப்பில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது, ​​ஜூன் 24-ம் தேதி தொடங்கிய 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த அமர்வு ஜூலை 1 ஆம் தேதி அதாவதி இன்று முடிவடைகிறது. ஏற்கனவே புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழா மற்றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் கூட்டுக் கூட்டத்தை ஜூன் 27 அன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த மாதம் இறுதியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். சந்தை நடத்தை பற்றிய ஆய்வு, பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பு முதலீட்டாளர்கள் தங்கள் வெளிப்பாட்டைக் குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆய்வு 2000 ஆம் ஆண்டு முதல் பங்குச் சந்தையை அவதானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடி 3.0 ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.  மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பட்ஜெட் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னிருந்தே முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் தங்களது வெளிப்பாட்டை குறைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் நாளன்று வரப்போகும் அறிவிப்புகள் பங்குச் சந்தையில் சரிவுகள் ஏற்படுதும் நிலை இருக்கும் என்ற காரணத்தால் இந்த போக்கு நிலவுகிறது என்றும், பட்ஜெட் அறிவிப்பிற்கு பின்னால் முதலீட்டாளர்கள் முழு வீச்சில் பங்குச் சந்தையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள், அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவ்ரகளுக்கான பிரத்யேக திட்டங்களும், புதிய சலுகைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக அடுத்த மாதம் தாக்கலாகும் முழு பட்ஜெட் பல்வேறு துறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கும்.

Also Read: நாளை பூமியை நோக்கி வரும் சிறுகோள்.. எச்சரிக்கும் நாசா.. நடக்கப்போவது என்ன?