Maharastra: தேர்தல் வெற்றி.. கொண்டாட சென்ற மகாராஷ்ட்ரா தேர்தல் வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்!

Maharashtra Assembly Election: சிவாஜி பாட்டீல் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர். அவர்களில் சிவாஜி பாட்டீல் மற்றும் சிலர் படுகாயமடைந்துள்ளதால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வெற்றியை சிறிது நேரம் கூட அனுபவிக்க முடியாமல் சுயேட்சை வேட்பாளருக்கு தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maharastra: தேர்தல் வெற்றி.. கொண்டாட சென்ற மகாராஷ்ட்ரா தேர்தல் வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்!

சிவாஜி பாட்டீல்

Updated On: 

24 Nov 2024 07:04 AM

மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் அடுத்த சில மணி நேரத்தில் தீவிபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. இதில் சந்த்காட் என்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சிவாஜி பாட்டீல் என்பவர் போட்டியிட்டார். அவர் மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தலில் 24,134 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இதனைத் தொடர்ந்து சிவாஜி பாட்டீல் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊர்வலமாக அனைவரும் சென்ற நிலையில் பல இடங்களில் சிவாஜி பாட்டீலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது ஒரு ஜேசிபி இயந்திரம் மூலம் அவருக்கு பூ தூவி வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது, அது சிவாஜி பாட்டீல் மீது கொட்டப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டது எப்படி?

அதனை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்ட அவருக்கு அடுத்த சில நொடிகளில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சிவாஜி பாட்டீல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பூ மழை பொழிய தொடங்கியதும் கூட்டத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அனைவரும் சிதறி ஓடினர். ஆனாலும் இந்த விபத்தில் சிவாஜி பாட்டீல் படுகாயமடைந்தார். அதுமட்டுமல்லாமல் ஆதரவாளர்கள், ஆரத்தி எடுக்க வந்த பெண்கள் என பலரும் காயமடைந்தனர்.

சிவாஜி பாட்டீல் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர். அவர்களில் சிவாஜி பாட்டீல் மற்றும் சிலர் படுகாயமடைந்துள்ளதால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வெற்றியை சிறிது நேரம் கூட அனுபவிக்க முடியாமல் சுயேட்சை வேட்பாளருக்கு தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

Also Read:PM Modi: காங்கிரஸின் போலித்தன்மையை நிராகரித்த மக்கள் – மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி விழாவில் பிரதமர் உரை..

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய இரு தேதிகளில் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வயநாடு உள்ளிட்ட பல்வேறு மக்களவை தொகுதி, சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அனைத்தும் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது.

மகாராஷ்ட்ரா தேர்தல்

288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலம், இந்தியாவில் அதிகமான தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்), சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியில் போட்டியிட்டது. மறுபுறம் பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி ( அஜித் பவார்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகியவை மற்றொரு கூட்டணி அமைத்தும் களம் கண்டன.

நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மகாராஷ்ட்ராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அதேசமயம் கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டாலும், ஓரளவு பாஜக கூட்டணிக்கு கடும் போட்டியை கொடுக்கும் அளவுக்கு தொகுதியை கைப்பற்றுவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த கூட்டணி 49 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Also Read:அரசு ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் மாதச் சம்பளம்.. எப்போது கிடைக்கும்?

இதனிடையே மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்குச் சென்று அங்கு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, மகாராஷ்ரா தேர்தல் மூலம் மோசடி செய்பவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். அம்மாநிலத்தின் வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் நாங்கள் எடுத்துச் செல்கிறோம். மராத்தி மொழிக்கு பல ஆண்டுகளாக சேவை செய்யும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. எங்கள் அரசு மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது என தெரிவித்தார்.

அதேசமயம் மகாராஷ்ரா தேர்தல் முடிவு எதிர்பாராத ஒன்று என்றும், தோல்வி குறித்து பின்னர் ஆராயப்படும் எனவும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?