5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Swiggy: டெலிவரி தூரத்தை உயர்த்திக் காட்டிய வழக்கு.. ஸ்விக்கிக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்!

Telangana: ஸ்விக்கி இணையதளம் வேண்டுமென்றே தூரத்தை அதிகரித்து காட்டியதோடு மட்டுமல்லாமல் என்னிடம் ரூபாய் 103 கூடுதலாக டெலிவரி கட்டணமாக வசூலித்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுரேஷ் பாபு தெரிவித்திருந்தார். மேலும் இந்த புகாருடன் சுரேஷ்பாபு கூகுள் மேப் ஸ்க்ரீன் ஷாட்களையும் ஆதாரமாக சமர்ப்பித்து இருந்தார்.

Swiggy: டெலிவரி தூரத்தை உயர்த்திக் காட்டிய வழக்கு.. ஸ்விக்கிக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 04 Nov 2024 22:49 PM

தெலங்கானா: டெலிவரி செய்யும் தூரத்தை செயற்கையாக உயர்த்தி வாடிக்கையாளரிடம் அதிக கட்டணம் வசூலித்த ஸ்விக்கி நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மற்ற வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டத்தில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதாவது, “குறிப்பிட்ட தூரத்தில் டெலிவரி செய்ய இலவசம் என்ற மெம்பர்ஷிப்பை நான் ஸ்விக்கியில் வாங்கியுள்ளேன். அப்படி இருக்கும் நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி ஸ்விக்கி செயலி மூலம் நான் உணவு ஆர்டர் செய்தேன். அப்போது என் வீட்டிற்கும் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கும் இடையே உள்ள தூரத்தை 14 கிலோமீட்டர் என ஸ்விக்கி செயலியில் காட்டியது. ஆனால் கூகுள் மேப்பில் பார்த்தால் உண்மையில் வீட்டிற்கும் உணவகத்திற்கும் இடையே உள்ள தூரம் 9.7 கிலோமீட்டர் தான்.

Also Read: ஷாக்கில் Swiggy, Zomato .. புதிய கட்டணத்தை அறிவித்த Magicpin.. முழு விவரம்!

ஆகவே ஸ்விக்கி இணையதளம் வேண்டுமென்றே தூரத்தை அதிகரித்து காட்டியதோடு மட்டுமல்லாமல் என்னிடம் ரூபாய் 103 கூடுதலாக டெலிவரி கட்டணமாக வசூலித்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுரேஷ் பாபு தெரிவித்திருந்தார். மேலும் இந்த புகாருடன் சுரேஷ்பாபு கூகுள் மேப் ஸ்க்ரீன் ஷாட்களையும் ஆதாரமாக சமர்ப்பித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது உணவு டெலிவரிக்காக சுரேஷ்பாபு செலுத்திய தொகையை அந்த தேதியில் இருந்து 9 சதவீதம் வட்டியுடன் கணக்கிடால் ரூ. 350.48  வருகிறது. இத்துடன் டெலிவரி கட்டணமாக ரூ. 103 பெறப்பட்டது. இவை இரண்டையும் ஸ்விக்கி நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ரூ. 5 ஆயிரம்,  செயற்கையாக தூரத்தை உயர்த்தி காட்டியதற்காக ரூ.5 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்ட நுகர்வோர் நல நிதியில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யவும் மாநில  நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: FD Interest Rate : 7.15% வரை வட்டி.. பொதுத்துறை வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

அசுர வளர்ச்சியில் ஸ்விக்கி 

இந்தியாவில் உணவு டெலிவரி நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் உணவெல்லாம் யார் ஆர்டர் செய்து வாங்குவார்கள் என கேலி செய்யப்பட்ட இந்த தளமானது தற்போது ஒரு நிமிடம் கூட ஆர்டர் புக் செய்யாமல் இருக்காது என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. ஸ்விக்கி, ஜொமேட்டோ என பலவகையான உணவு டெலிவரி நிறுவனங்கள் சந்தையில் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றனர். வாடிக்கையாளரை கவரும் வண்ணம் விதவிதமான ஆஃபர்கள், சலுகை கட்டணம் என வாரி வாரி வழங்குவது வழக்கம். இந்த உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் ஏராளமான வேலைவாய்ப்பில்லாத ஆண்களும் பெண்களும் பயனடைந்து வருகின்றனர். 24 மணி நேரமும் உணவு டெலிவரி என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்கள் பங்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது . அதேசமயம் சேவை கட்டணம் உள்ளிட்டவையும் அவ்வப்போது உயர்த்தப்படுவது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது வழக்கம்.

இதனிடையே இ- காமர்ஸ் செயலி மேஜிக்பின் தனது பிளாட்பாரம் கட்டணத்தை ஒவ்வொரு டெலிவரிக்கும் ரூபாய் 5 குறைத்துள்ளது. முன்னதாக மற்ற உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவை பிளாட்பார்ம் கட்டணத்தை தீபாவளியை ஒட்டி உயர்த்திய நிலையில் மேஜிக் பின் நிறுவனம் குறைத்துள்ளது சந்தையில் பேசு பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக மேஜிக் பின் நிறுவனத்தின் நிறுவனர் ஆன்ஷூ சர்மா தெரிவிக்கையில், பண்டிகை காலங்களில் எங்களது நிறுவனம் டெலிவரி ஹீரோவாக இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எங்களுக்கும் இடையில் சம நிலையை கடைபிடிக்க முடியும் என நம்புகிறோம். 2024 ஆம் ஆண்டில் உணவு டெலிவரிக்கு எந்த கட்டணமும் அதிகரிக்கப்படாது என தெரிவித்தவர் மற்ற நிறுவனங்களைப் போல பாம் கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்துள்ளார்.

Latest News