Arvind Kejriwal : “டெல்லி மாதிரியை இந்தியா முழுவதும் அமல்படுத்துங்கள்”.. பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்! - Tamil News | Former Delhi chief minister Arvind Kejriwal replied to Prime Minister Narendra Modi | TV9 Tamil

Arvind Kejriwal : “டெல்லி மாதிரியை இந்தியா முழுவதும் அமல்படுத்துங்கள்”.. பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்!

PM Modi | நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகள் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் உள்ள 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு என்னால் இந்த சேவையை செய்ய முடியவில்லை என்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Arvind Kejriwal : டெல்லி மாதிரியை இந்தியா முழுவதும் அமல்படுத்துங்கள்.. பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்!

கோப்பு புகைப்படம்

Published: 

30 Oct 2024 18:59 PM

டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து பதில் அளித்துள்ள அவர், டெல்லி மாடலை இந்தியா முழுவதும் அமல்படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முதியவர்களுக்கான மருத்துவ காப்பீடு குறித்து பிரதமர் கூறியது என்ன, அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Viral Video : பிறந்தநாள் கேக்கில் எடுக்க எடுக்க வந்த 500 ரூபாய் நோட்டுகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

நேற்று (அக்டோபர் 29 ஆம் தேதி) டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.12,850 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பயனடையும் விதமாக அவர்கள் அனைவரையும் “ஆயுஷ்மான் யோஜனா” காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதன்படியே, இன்று (அக்டோபர் 29) தன்வந்தரி ஜெயந்தி நாளில் அந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படுகிறது. அதன்படி, நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் வயா வந்தனா காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமன்றி இந்த திட்டத்தின் மூலம் குடும்பச் செலவுகளும் குறையும், அவர்களின் கவலைகளும் குறையும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : Diwali 2024: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? – இன்று இரவு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசு மீது பிரதமர் பகீர் குற்றச்சாட்டு

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகள் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் உள்ள 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு என்னால் இந்த சேவையை செய்ய முடியவில்லை என்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். உங்கள் துன்பங்களையும், வலிகளையும் நான் அறிவேன். ஆனால் என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. காரணம், டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசாங்கங்கள் தங்களின் அரசிய லாபத்திற்காக இந்த திட்டத்தை உங்கள் மாநிலங்களில் அமல்படுத்தவில்லை என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படிங்க : Madurai : மதுரை வெள்ள பாதிப்பு.. ரூ.11.9 கோடிக்கு புதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்!

பிரதமரின் குற்றச்சாட்டுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

பிரதமர் மோடியின் இந்த பகீர் குற்றச்சாட்டுக்கு ஆம்.ஆத்.மி கட்சி தலைவரும் முன்னாள் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் அவர்களே, மக்களின் சுகாதார பிரச்னைகளில் தவறாக பேசுவது சரி அல்ல. சுகாதார பிரச்னைகளில் அரசியல் செய்வதும் சரியானது அல்ல. டெல்லி அரசின் திட்டத்தின்படி, டெல்லியில் வசிக்கும் மக்கள் எவ்வளவு செலவானாலும், முழுமையான சிகிச்சையை இலவசமாக பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க : Train Service: சென்னை மக்கள் கவனத்திற்கு.. நாளை ரயில் சேவையில் மாற்றம்!

அதாவது ரூ.5 மதிப்பிலான மாத்திரை முதல் ரூ.1 கோடி வரை டெல்லி அரசு ஒவ்வொருவருக்கும் முழுமையான சிகிச்சையை இலவசமாக வழங்கி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் மூலம் மக்கள் பயன் அடைந்தார்களா அல்லது முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை சிஏஜி கண்டறிந்தது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் பயன் பெற்ற ஒருவரையும் நான் இதுவரை சந்திக்கவில்லை. டெல்லி மாதிரையை இந்தியா முழுவதும் அமல்படுத்துங்கள். அதனால் மக்கள் பயனடைவார்கள் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகளா?
சர்க்கரை பதில் வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
சாப்பாட்டில் நெய் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
உறவுகளில் நம்பிக்கையை வளர்க்க ஈஸியான டிப்ஸ்!