5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indira Gandhi: இந்தியாவின் ஆளுமைமிக்க பெண்.. இந்திரா காந்தி பிறந்த தினம் இன்று!

தனது 12 ஆம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுத்திக் கொண்ட இந்திரா காந்தி வானரசேனா என்ற அமைப்பை இளைஞர்களுடன் இணைந்து ஏற்படுத்தினார். நேரு பிரதமராக பதவியேற்ற நிலையில் அவர் செல்லும் அனைத்து வெளிநாட்டு பயணங்களுக்கும் இந்திரா காந்தி உடன் செல்வார்.

Indira Gandhi: இந்தியாவின் ஆளுமைமிக்க பெண்.. இந்திரா காந்தி பிறந்த தினம் இன்று!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Nov 2024 08:53 AM

இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்கலால் நேருவின் மகள், இந்திய பிரதமர் பதவியை அலங்கரித்த ஒரே பெண்மணி என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர் இந்திரா காந்தி. 1917 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்த இந்திரா காந்தியின் இயற்பெயர் இந்திரா பிரியதர்ஷினி என்பதுதான். பெரோஸ் காந்தியை திருமணம் செய்த பிறகு சுருக்கமாக இந்திரா காந்தி என அழைக்கப்பட்டார். நேருவால் 1950 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திரா காந்தி அவர் இறந்த போது மாநிலங்களை உறுப்பினராக செயல்பட்டார். பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி மரணத்திற்கு பின் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திராவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி பல முக்கிய திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகளிலும் சிக்கினார். மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பயின்ற இந்திரா காந்தி பசுமை புரட்சி திட்டம், வங்கிகளை தேசியமயமாக்கியது, வங்கதேசம் உருவானதில் முக்கிய பங்கு வகித்தது, பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனை என பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் காரணமாக அமைந்தார். இந்தியாவின் ஆளுமை மிக்க பெண் தலைவர் என்ற அடைமொழிக்கு இன்றளவும் சொந்தக்காரராக இந்திரா காந்தி சொல்லப்படுகிறார்.

தனது 12 ஆம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுத்திக் கொண்ட இந்திரா காந்தி வானரசேனா என்ற அமைப்பை இளைஞர்களுடன் இணைந்து ஏற்படுத்தினார். நேரு பிரதமராக பதவியேற்ற நிலையில் அவர் செல்லும் அனைத்து வெளிநாட்டு பயணங்களுக்கும் இந்திரா காந்தி உடன் செல்வார். நேருவை சந்திக்க வரும் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கையாளும் பொறுப்பு இந்திரா காந்திக்கு வழங்கப்பட்டிருந்தது.

சாதனைப் படைத்த இந்திரா காந்தி

இந்திரா காந்தி வங்கிகளை தேசிய மாயமாக்கிய பின் இங்கு உள்ள பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. அது மட்டுமல்லாமல் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவோடு இணைத்தவரும் இந்திரா காந்தி தான். அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் இப்போது வரை எந்த நாட்டிலும் உள்ள எந்த நீதிமன்றத்திலும் இந்த ஒப்பந்தத்தை விவாதிக்க முடியாத வகையில் நடவடிக்கைகள் இருந்தது. தனது முடிவுகளுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் இந்திரா காந்தி அதற்கான விமர்சனங்களை பற்றி துளி கூட கவலை கொண்டதில்லை.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு 1984 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோயில் நடந்த தாக்குதல் சீக்கிய மக்களிடையே இந்திரா காந்தி மீது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.இதனைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சில தவறான முடிவுகள் தான் அவரை சர்வாதிகாரியாக இந்திய நாட்டுக்கு அடையாளப்படுத்தியது. எப்போதும் தவறுகள் மட்டும்தான் பேசப்படுமா என்ன.. சரித்திரமும் பேசப்படும்.. அந்த வகையில் இந்திரா காந்தி என்றும் இந்திய வரலாற்றில் நினைவு கூறப்படுபவர் ஆவார்.

1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை 19 மாதங்கள் நீடித்தது. இந்த முடிவு அவரின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது என சொல்லலாம். இதன் பின்னர் எதிர்கொண்ட தேர்தலில் அவர் பெரும் தோல்வியை தழுவினார். உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் செல்வ மகளாக விளங்கிய இந்திரா காந்தி இந்தியாவையே ஆண்டு சரித்திரத்தில் ஒருவராக இடம் பிடித்தார். பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா காந்திக்கு ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தியாகிய இரு மகன்கள் பிறந்தனர். சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்த நிலையில் ராஜீவ்காந்தி இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். ஆனால் அவரும் 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு அந்த குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News