5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Udaipur: அரண்மனை வாரிசுகளுக்கு இடையே சண்டை.. ராஜஸ்தானில் பதற்றம்!

Rajasthan: உதய்பூரில் உள்ள சிட்டி பேலஸ் அரண்மனையில் முன்னாள் மேவார் அரச குடும்ப உறுப்பினர் விஸ்வராஜ் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் நுழைய அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Udaipur: அரண்மனை வாரிசுகளுக்கு இடையே சண்டை.. ராஜஸ்தானில் பதற்றம்!
அரண்மனை வாயிலில் விஷ்வராஜ் ஆதரவாளர்கள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Nov 2024 09:38 AM

உதய்பூர் அரண்மனை: ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உதய்பூரில் உள்ள சிட்டி பேலஸ் அரண்மனையில் முன்னாள் மேவார் அரச குடும்ப உறுப்பினர் விஸ்வராஜ் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் நுழைய அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அரண்மனைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் அரண்மனை உள்ளது. மிகப் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ள இந்த அரண்மனையை அரச குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

Also Read: Namakkal: சாதி பெயரில் இயங்கி வந்த பள்ளி.. மை பூசி அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்

என்னதான் பிரச்னை?

இந்த குடும்பத்தின் 77வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏ.வான விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார். இவருக்கும், அரவிந்த் சிங் மேவார் என்ற ஒன்றுவிட்ட சகோதருக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டு வந்தது. இதனிடையே விஷ்வராஜ் சிங்கின் தந்தை மகேந்திர சிங் மேவார் நவம்பர் மாத தொடக்கத்தில் காலமானார். இதனைத் தொடர்ந்து விஷ்வராஜ் சிங் அரியணையில் ஏற்றும் நிகழ்ச்சியானது சித்தோர்கர் கோட்டையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரியணை விழா அங்குள்ள சித்தோர்கர் கோட்டையின் ஃபதாபிரகாஷ் மஹாலில் நடைபெற்றது. இதில் பல அரச குடும்பங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் நுனியில் உள்ள அரண்மனைக்கு செல்ல விஸ்வராஜ் சிங் முடிவு செய்தார். ஆனால் அவரின் சகோதரர் அரவிந்த் சிங் மேவார் ஆகியோருக்கு இடையே நிலவும் தகராறு காரணமாக அரண்மனைக்குள் செல்ல அனுமதி மறுத்தார். ராஜஸ்தானின் மேவார் குடும்பம் புகழ்பெற்ற ஆட்சியாளர் மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றல் ஆகும். உதய்பூரில் உள்ள கோயில் மற்றும் அரண்மனை இரண்டும் செயல்படும் ஸ்ரீ எக்லிங் ஜி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலராக அரவிந்த் சிங் மேவார் உள்ளார்.

நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை

அரண்மனைக்கு நுழைய விடாமல் இருக்க கதவுகள் மூடப்பட்டது. முன்னதாக தஸ்தூர் திட்டத்தின் கீழ் உதய்பூரில் உள்ள ஏக்லிங் நாத் கோயில் மற்றும் சிட்டி பேலஸ் அரண்மனை ஆகியவற்றுக்கு விஸ்வராஜ் செல்தற்கு எதிராக அரவிந்த் சிங் பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் விழா என்ற பெயரில் அத்துமீறல் செய்ய முயற்சிக்கப்படுவதாகவும், கோவில் மற்றும் நகர அரண்மனைக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு வெளியான பிறகு உதய்பூரின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரண்மனை வெளியே போலீசார் நிறுத்தப்பட்டனர். அதேசமயம் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நுழைய அனுமதிக்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது என்றும் நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

Also Read: Viral Video : பார்லே ஜி-ல் பிரியாணி செய்த இளம் பெண்.. ஷாக் ஆன 90ஸ் கிட்ஸ்.. வைரலாகும் வீடியோ

அதேபோல் அரண்மனைக்குள் கட்டாயமாக நுழைந்து, சொத்துகளை சேதப்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சித்தோர்கர் கோட்டையில் நிகழ்ச்சி முடிந்ததும் விஸ்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரண்மனை மற்றும் எக்லிங்நாத்ஜி கோவிலில் உள்ள ஒரு இடத்தைப் பார்வையிட நேற்று மாலை உதய்பூருக்கு சென்றனர். ஆனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் தடுப்புகளை தகர்த்தெறிந்து உள்ளே நுழைய முயன்றனர், ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விஸ்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் பேசி பிரச்சினையை தீர்க்க முயன்றனர், ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் போஸ்வால் மற்றும் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் கோயல் ஆகியோர் அரண்மனை வாயிலில் நீண்ட நேரம் காத்திருந்த பின் புறப்பட்டுச் சென்றனர். இப்படியான நிலையில் நேரம் செல்ல செல்ல விஸ்வராஜின் ஆதரவாளர்கள் அதிகமாக வந்ததால் நள்ளிரவில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் பெண் உட்பட சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News