தாய்ப்பால் விற்பனைக்கு தடை… வந்தது அதிரடி உத்தரவு! - Tamil News | | TV9 Tamil

தாய்ப்பால் விற்பனைக்கு தடை… வந்தது அதிரடி உத்தரவு!

Updated On: 

27 May 2024 11:58 AM

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாய்ப்பாலை பதப்படுத்தவோ, விற்கவோ அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது. தாய்ப்பாலை விற்பனை செய்யும் உணவு வணிகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக் கூடாது. இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆன்லைன் ஆப்கள் மூலம் தாய்ப்பால் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தாய்ப்பால் விற்பனைக்கு தடை... வந்தது அதிரடி உத்தரவு!

தாய்ப்பால்

Follow Us On

தாய்ப்பால் விற்பனைக்கு தடை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாய்ப்பாலை பதப்படுத்தவோ, விற்கவோ அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது. தாய்ப்பாலை பதப்படுத்தி ஆன்லைன் மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. தாய்ப்பாலை விற்பனை செய்வதற்கு பல்வேறு இன்ஸ்டாகிராம் தளங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாய்ப்பாலை பதப்படுத்தவோ, விற்கவோ அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்தவோ, விற்பனை செய்யவோ அனுமதி இல்லை. தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை விற்பனை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அறிவுதப்படுகிறது.

Also Read: இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்!

மீறினால்.. 

இதை மீறினால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் வழிகாட்டுதலின்படி, நன்கொடையாளர் தாய்ப்பாலை எந்த ஒரு வணிக நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமே இது வழங்கப்பட வேண்டும். தாய்ப்பால் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம். தாய்ப்பாலை விற்பனை செய்யும் உணவு வணிகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக் கூடாது. இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆன்லைன் ஆப்கள் மூலம் தாய்ப்பால் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்திய உணவு பாதகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Also Read: தேதி குறித்த I.N.D.I.A கூட்டணி.. தேர்தல் முடிவு முன்பே எதிர்க்கட்சிகள் ஸ்கெட்ச்!

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version