5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

G7 summit: ஜி7 நாடுகள் மாநாடு.. இன்று இத்தாலி செல்லும் பிரதமர் மோடி

Narendra Modi : மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தங்களது பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்ல உள்ளார்.

G7 summit: ஜி7 நாடுகள் மாநாடு.. இன்று இத்தாலி செல்லும் பிரதமர் மோடி
மோடி
Follow Us
c-murugadoss
CMDoss | Updated On: 13 Jun 2024 09:20 AM

மோடியின் இத்தாலி பயணம்: இத்தாலியில் இன்று முதல் 15ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இத்தாலியில் உள்ள அபுலியாவில் உள்ள போர்கோ எக்னாசியாவில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. வளர்ந்த பொருளாதாரங்களை கொண்ட ஏழு நாடுகள் இருப்பது ஜி7 அமைப்பாகும். இதில் கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மணி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் நடைபெறும் ஜி7 மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் தலைமையேற்றும் நடத்தும். அந்த வகையில், இந்தாண்டு ஜி7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு வளரும் நாடுகளின் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி. 3வது முறையாக பதவியேற்று பிரதமர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

முன்னதாக, இந்த உச்ச மாநாட்டிற்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். இதுகுறித்து வெளியுறுவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “, இத்தாலியின் புக்லியா பகுதியில் நடைபெற உள்ள G7 உச்சி மாநாட்டிற்கான அழைப்புக்கு நன்றி தெரிவித்து, இத்தாலி பிரதமர் மெலோனி உரையாற்றினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதன் மூலம் இருநாட்டுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்று உறுதி அளிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி டெல்லிக்கு வந்தபோது, இருநாடு உறவுகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழிசையை மேடையில் அழைத்து கண்டித்தாரா அமித்ஷா? வைரலாகும் வீடியோ!

மோடி 3.0

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி முதல் நடந்து முடிந்தது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் நிலையில், பாஜக 240 இடங்களை கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வென்றது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் மோடி. இந்த நிலையில்,  டெல்லியில் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். டெல்லியில்  மிகவும் பிரம்மாணடமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அரசியில் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், குடிமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சாந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியல் பிரதமர் பிரவிந்த் குமுர் ஜுகனாத், பூட்டார் பிரதமர் ஷெரிங் டாக்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Latest News