மோசடியில் ஈடுபட்டரா அதானி? கோடிக்கணக்கில் அதிகாரிகளுக்கு லஞ்சம்.. அமெரிக்கா குற்றச்சாட்டு!
Gautam Adani : இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதன் அதானி கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு லட்ஞசமாக 265 மில்லியன் டாலர் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதன் அதானி கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதாவது, கடந்த ஆண்டு அதானி குமுமம் மீது ஹிண்ட்ர்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்களை வைத்தது. பெரும் புயலை கிளப்பிய இந்த விவாகரத்தால் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக சரிந்து பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் விஸ்வரூபம் எடுத்தது.
மோசடியில் ஈடுபட்டரா கவுதம் அதானி?
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியும், போராட்டங்களும் நடத்தின. அந்த அளவுக்கு ஹிண்டன்பர்க் அறிக்கை அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில், மீண்டும் அதானி மீது பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அதானி கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
2020 முதல் 2024ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு லட்ஞசமாக சுமார் 265 மில்லியன் டாலர் கொடுத்தாக அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Also Read : இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு.. பயங்கர அடிவாங்கிய அதானி பங்குகள்!
கோடிக்கணக்கில் அதிகாரிகளுக்கு லஞ்சம்
BREAKING: Gautam Adani and 7 other executives criminally indicted in the U.S. over $250 million in alleged bribes.
The SEC has filed parallel charges in the “massive bribery scheme”.https://t.co/uWULHHI7Ab
— Hindenburg Research (@HindenburgRes) November 20, 2024
இந்த வழக்கில் அதானிக்கு அமெரிக்க நியூயார்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கல் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், லஞ்சம் கொடுப்பதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கடன் தருபவர்களிடம் இருந்து 300 கோடி டாலருக்கு மேல் கடனாகவும், பத்திரமாகவும் அதானி நிறுவனம் பெற்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டியுள்ளார்.
அதானி செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது என்று கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஜனவரி 2023 முதல் காங்கிரஸ் விசாரணைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். அதானி மற்றும் அவரது வணிக பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட முறைகேடுகள் குறித்து கவலைகளை எழுப்புகிறது.
மோடி மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானி இடையேயான உறவு குறித்து 100 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் ஒரு கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. அதானியின் முறைகேடுகளை விசாரிக்க வெளிநாட்டு அரசு முன்வந்துள்ளது.
பங்குச்சந்தை மற்றும் அதன் தொடர்பான சட்டங்களை மீறி அதானி குழுமம் செயல்பட்டது தொடர்பாக செபி முறையாக விசாரிக்கவில்லை என்பதை அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்தின் (SSC) நடவடிக்கைகள் காட்டுகிறது.
தன்னுடைய முதலீட்டுகளின் ஆதாரங்கள் குறித்தும் Shell கம்பெனிகள் குறித்தும் அதானி முறையாக விளக்கம் அளிக்கவில்லை. எனவே, முழு அளவிலான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் வலியுறுத்துகிறது” என்றார்.
Also Read : சீன பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்.. எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை அதானி தரப்பும், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி எனர்ஜி, அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சுமார் பத்து சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை இந்திய பங்குச்சந்தை நிஃப்டி 187 புள்ளிகள் சரிந்து 23,330 ஆகவும், சென்செக்ஸ் 549 புள்ளிகள் சரிந்து 77,028 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் எதிரொலியான அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்துள்ளன.