5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

GST Rate: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி.. மாணவர்கள் விடுதிகளுக்கு விலக்கு – மத்திய நிதியமைச்சர்..

அனைத்து வகை பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரியும், மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கும் அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு, இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கான வரி விலக்கு மற்றும் போலி விலைப்பட்டியலைச் சரிபார்க்க பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் தொடர்பான பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

GST Rate: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி.. மாணவர்கள் விடுதிகளுக்கு விலக்கு – மத்திய நிதியமைச்சர்..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Nov 2024 11:34 AM

ஜி.எஸ்.டி வரி: அனைத்து வகை பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரியும், மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கும் அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு, இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கான வரி விலக்கு மற்றும் போலி விலைப்பட்டியலைச் சரிபார்க்க பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் தொடர்பான பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதில் மத்திய அரசின் நோக்கம் தெளிவாக இருப்பதாகவும், எரிபொருளின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை மாநிலங்களவையில் வைத்து முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ அனைத்து சோலார் குக்கர்களுக்கும் 12% ஜிஎஸ்டியை நிர்ணயிக்க கவுன்சில் பரிந்துரைத்ததுள்ளது. சாமானியர்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும் சேவைகள், நடைமேடை டிக்கெட் விற்பனை, ஓய்வு அறை வசதி, காத்திருப்பு அறைகள், ஆடை அறை சேவைகள், பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவைகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், உள்-ரயில் விநியோகங்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களுக்கான விடுதிகளுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.20,000 வரை வழங்கக்கூடிய தங்குமிட சேவைகளுக்கு விலக்கு அளிக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, ”எஃகு, இரும்பு, அலுமினியம் போன்றவைகளில் அடைக்கப்பட்ட அனைத்து வகை பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியான 12% வரி விகிதத்தை கவுன்சில் பரிந்துரைத்தது. இந்த விகிதத்தில் எந்த சர்ச்சையும் ஏற்படாத வகையில் பயன்படுத்தப்படும். அனைத்து அட்டைப்பெட்டிகள் காகிதம் அல்லது காகிதப் பலகைகளின் மீது 12% ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விகிதத்தை பரிந்துரைக்கவும் கவுன்சில் பரிந்துரைத்ததுள்ளது” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Also Read:  Term Deposit : டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை வாரி வழங்கும் SBI.. முழு விவரம் இதோ!

Latest News