GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு! - Tamil News | gst rates likely to be cut on 20 litre water bottles bicycles watch luxary shoes and exemption on health issurance | TV9 Tamil

GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு!

ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகைக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், வாட்ச், காலணிகள், 20 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு!

ஜிஎஸ்டி (picture credit: Getty/PTI)

Updated On: 

20 Oct 2024 09:33 AM

ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகைக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், வாட்ச், காலணிகள், 20 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது விலக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அமைத்தது.

ஜிஎஸ்டி வரியில் மாற்றம்:

பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌதரி தலைமையில் இந்த் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, குஜராத், மேகாலயம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில்  ஆயுள் காப்பீடு மற்றும் மூத் குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகைக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

Also Read: காலி பணியிடங்களில் முன்னாள் ஊழியர்கள்.. ரயில்வே முடிவுக்கு பெருகும் எதிர்ப்பு!

அதாவது, ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கவும், ரூ.5 லட்சத்துக்கு அதிகமான மருத்துவக் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா?

தற்போது மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகைக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18,28 சதவீதம் என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி விகித பகுப்பாய் தொடர்பாக சாம்ராட் சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட மற்றொரு அமைச்சர்கள் குழுவும் நேற்று கூடியது.

இந்த குழுவில் உத்தர பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சர்கள் உள்ளன. நேற்று நடந்த கூட்டத்தின் முடிவில், 20 லிட்டர் மற்றும் அதற்கு மேல் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீருக்கு ஜிஎஸ்டி குறைக்க பரிந்துரை செய்துள்ளது.

அதாவது, 20 லிட்டர் மற்றும் அதற்கு மேல் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீருக்கு தற்போது ஜிஎஸ்டி வரி 18 சதவீதம் விதிக்கப்படும் நிலையில், 5 சதவீதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டது.

தண்ணீர் பாட்டில் முதல் வாட்சி வரை:

அதேபோல, நோட் புத்தகங்கள், ரூ.10,000 மற்றும் அதற்கு அதிகமாக உள்ள சைக்கிள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சைக்கிளுக்கு 12 சதவீதம் விதிக்கப்படுகிறது.

ஷுக்கள் மற்றும் வாட்ச்களுக்கான ஜிஎஸ் வரியை உயர்த்த அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதாவது, ரூ.15,000 மற்றும் அதற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் ஷுக்கள் மற்றும் ரூ.25,000-க்கும் மேற்பட்ட வாட்ச்களுக்கான ஜிஎஸ்டியை 18 சதவிதத்தில் இருந்து 28 சதவிதமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

ஹேர் ட்ரையர்கள், ஹேர் கர்லர்கள், அழகு அல்லது மேக்கப் தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படலாம். இதற்கெல்லாம் தற்போது 18 சதவீதம் விதிக்கப்படும் நிலையில், அது 28 சதவீதமாக உயர்த்த பரிதுரைக்கப்பட்டது.

அதேபோல, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைப்படும் உள்பட 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி சதவீதத்தை மாற்றுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Also Read: குர்பந்த் சிங் பன்னுனை கொல்ல முயற்சி.. விகாஸ் யாதவ் டெல்லியில் கைது!

நிர்மலா சீதாராமன் எடுக்கப்போகும் முடிவு:

இரண்டு அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.  ஜிஎஸ்டி விரியில் எந்த பொருட்களுக்கு விலக்கு, எந்த பொருட்களுக்கு குறைவு, அதிகம் போன்ற முடிவுகளை நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் அறிவிப்பார்.

இதன் மூலம் பொருட்களுக்கான விலையும் நிர்ணயம் செய்யப்படும். அமைச்சர்கள் குழு அளித்த பரிந்தரையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றால் கூடுதலாக ரூ.22,000 கோடி வரி வருவாய் கிடைக்கலாம் என்று சாம்ராட் சௌதரி தெரிவித்திருக்கிறார்.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?