ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? நிர்மலா சீதாராமன் எடுத்த முக்கிய முடிவு! - Tamil News | gst rates on cancer drugs reduced decision on health insurance postponed says nirmala sitharam tamil news | TV9 Tamil

ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? நிர்மலா சீதாராமன் எடுத்த முக்கிய முடிவு!

Updated On: 

10 Sep 2024 10:41 AM

GST Council Meeting: டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? நிர்மலா சீதாராமன் எடுத்த முக்கிய முடிவு!

நிர்மலா சீதாராமன்

Follow Us On

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் சில புற்றுநோய் மருந்துகளின் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதாவது, டிரஸ்டு சுமாப் டிரக்ஸ்டிகன், ஆசிமர்டினிப், டுர்வாலுமாப் ஆகிய புற்றுநோய் மருந்துகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் பிரிமீயத்தில் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பான முடிவு அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரி விகிதத்தை பகுப்பாய்வு செய்யும் அமைச்சர்கள் குழுவும் ரியல் எஸ்டேட் தொடர்பான அமைச்சர்கள் குழுவும் நேற்று நிலை அறிக்கையை சமர்த்தது. மேலும், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கான தவணை தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்படும என்றும் தெரிவித்தார். அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தவணை தொகை மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து நவம்பரில் நடைபெறும அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Also Read: இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு? இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனை போங்க!

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு தவணை தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் கடிதம் எழுதினார். இந்த சூழலில் நேற்றை கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

கார் இருக்கைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட உள்ளது. அதாவது கார் இருக்கைகள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருசக்கர வாகனங்களின் இருக்கைகளுக்கு ஏற்கனவே 28 சதவீத ஜிஎஸ்டி வதிக்கப்படும் நிலையில், அதற்கு இணையாக கார் இருக்கைகளுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் ரூ.2000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவாக்ரள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவை எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்கான நிர்ணக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த குழு டிஜிட்டல் பரிவர்த்தணைகக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்.

Also Read: 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.55% வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரூ.2,000 வரை நடைபெறும் பரிவர்த்தனைகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளும் நிறுவனங்கள் சுமார் 18% வரை ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என கேட்வே நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தீயாக பரவிய நிலையில், கடும் அதிரவலைகளை ஏற்படுத்தியது. இப்படியான சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தணைகக்கு வரி விதிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version