குஜராத்தில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்.. - Tamil News | gujarat a car collided with heavy vehicle and 7 deceased on spot know more in detail | TV9 Tamil

குஜராத்தில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..

Published: 

25 Sep 2024 11:47 AM

காரில் மொத்தம் 8 பேர் இருந்ததாகவும், அவர்கள் ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களையும், இறந்தவர்களையும் அடையாளம் கண்ட போலீசார், அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..

குஜராத் விபத்து

Follow Us On

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத் நகரில் இன்று காலை பெரும் விபத்து ஏற்பட்டது. அப்போது முன்னால் சென்ற லாரி மீது வேகமாக வந்த கார் மோதியது. விபத்தின் போது, ​​காரின் வேகம் அதிகமாக இருந்ததால், காரின் பாதி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேவேளையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அவர்களில் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. கார் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


காரில் மொத்தம் 8 பேர் இருந்ததாகவும், அவர்கள் ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களையும், இறந்தவர்களையும் அடையாளம் கண்ட போலீசார், அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது வேகம் மணிக்கு 120 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. வெற்றிக்கனி யாருக்கு?

ஏனெனில் கார் விபத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் கார் வந்த வேகத்தில், காரின் முன் பகுதி அதாவது ஒரு பாதி அப்படியே லாரிக்குள் மோதி அப்பளம் போல் நொருங்கியுள்ளது. எனவே போலீசார் மற்றும் தீயணைப்பு துறை ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு காரை வெட்டி உடல்களை வெளியே எடுத்தனர். சபர்கந்தா எஸ்பி விஜய் படேல் கூறுகையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. உடனே போலீசார் காயம் அடைந்தவரை காரில் இருந்து இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வாகனத்தில் இருந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவர்கள் வந்தவுடன் சடலங்களின் பிரேத பரிசோதனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ‘பிச்சைகாரர்கள் நாட்டில் நுழைவதை தடுக்க வேண்டும்’ – பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா வைத்த கோரிக்கை..

இந்த விபத்துக்கான காரணம் கார் ஓட்டுநரின் தூக்கமின்மை காரணமாக இருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து இடம்பெற்ற போது லாரி சாதாரண வேகத்தில் இயங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேசமயம் காரின் வேகம் மிக அதிகமாக இருந்தததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கார் டிரைவர் தூக்கமின்மை காரணமாக மயக்கமடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தனது காரைக் கட்டுப்படுத்துவதற்குள், கார் லாரி மீது மோதியிருக்கலாம் எனவும் சம்பவம் குறித்து ஓட்டிநர் சாரதியே பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories
தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு..
Mpox: அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்..
UNSC Counsil: இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்குமா? பிரட்டன் எடுத்த முடிவு!
PM Modi CM Stalin Meet: 30 நிமிடம்.. பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன பேசுனாங்க தெரியுமா?
Uttarpradesh: திருப்பதி லட்டு சர்ச்சை.. உ.பி., கோயில்களில் பிரசாதங்களுக்கு கடும் கட்டுப்பாடு..!
Uttarpradesh Crime News: ”பள்ளிக்கு புகழ் கிடைக்கணும்” 2ம் வகுப்பு மாணவன் நரபலி.. ஆசிரியர்கள் செய்த கொடூரம்!
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version