5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gujarat Election Exit Poll 2024: குஜராத் மக்களவைத் தொகுதி முடிவுகள்.. கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

Lok sabha Elections Exit Poll 2024 Results : ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 26 இடங்களில் பாஜக 26 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், VMR தனது கருத்துக்கணிப்பிலும் குஜராத்தில் பாஜக முழுமையாக வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் காங்கிரஸூக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gujarat Election Exit Poll 2024: குஜராத் மக்களவைத் தொகுதி முடிவுகள்.. கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!
குஜராத் மக்களவை தேர்தல் எக்ஸிட் போல் ரிசல்ட்
intern
Tamil TV9 | Updated On: 02 Jun 2024 06:55 AM

Gujarat Election Exit Poll 2024: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்புகளும் ஜூன் 1, 2024 சனிக்கிழமை மாலை 6:30 மணி முதல் அறிவிக்கப்பட்டன. குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 7 அன்று நிறைவடைந்தது. மாநிலத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள பா.ஜ.க முனைப்புடன் செயல்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் 319 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த ஆண்டு குஜராத்தில் மொத்தம் 266 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முக்கிய வேட்பாளர்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா காந்திநகரில் போட்டியிடுகிறார், அவர்களுடன் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மன்சுக் மாண்டவியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

6 கட்டங்களாக 486 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், முதல் 6 கட்டங்களில் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம், 65.68 சதவீதம், 69.16 சதவீதம், 62.2 சதவீதம் மற்றும் 63.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கருத்துக் கணிப்பு முடிவுகள்

ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 26 இடங்களில் பாஜக 26 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், VMR தனது கருத்துக்கணிப்பிலும் குஜராத்தில் பாஜக முழுமையாக வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் காங்கிரஸூக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டுடே சாணக்கியா கருத்துக் கணிப்பில் பாஜக முழுமையாக வெற்றிப் பெறும் என்றும் டைம்ஸ் நவ் இடிசி கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. முழுமையாக வெற்றிப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.வி 9 முடிவுகள்

டி.வி. 9 கருத்துக் கணிப்பில் குஜராத்தில் உள்ள மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜனதா வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள், பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான NDA மக்களவையில் உள்ள 543 இடங்களில் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறலாம் எனத் தெரிவிக்கின்றன.

Gujarat Election Exit Poll 2024 results

குஜராத் மக்களவை தொகுதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்

மேலும், சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸிடம் தோல்வியடைந்த கர்நாடகாவில் பாஜக மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதாக பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு ஆந்திரப் பிரதேச தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : Bihar Election Exit Poll 2024: எழுச்சி பெறுகிறதா எதிர்க்கட்சிகள்? எக்ஸிட் போல் சொல்வது என்ன?

Latest News